ETV Bharat / state

தூத்துக்குடியில் 1,500 லிட்டர் கலப்பட பால் பறிமுதல்.!

author img

By

Published : Mar 6, 2023, 1:27 PM IST

பாலில் கலப்படம் செய்து விற்பதாக எழுந்த புகாரையடுத்து, அரசு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் சுமார் 1,500 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்யப்பட்டது.

கலப்பட பால் பறிமுதல்
கலப்பட பால் பறிமுதல்
கலப்பட பால் பறிமுதல்

தூத்துக்குடி: மாநகர பகுதி, விளாத்திக்குளம், பசுவந்தனை, ஒட்டப்பிடாரம், கயத்தார், புதியம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பேருந்து மற்றும் வாகனங்கள் மூலம் கேண்களில் பால் விற்பனைக்கான கொண்டு வரப்படுகிறது. இந்த பாலில் தண்ணீர் மற்றும் கெமிக்கல் கலந்து விற்பனை செய்வதாக மாவட்ட நிர்வாகம் மற்றும் உணவு பாதுகாப்புத் துறைக்கு புகார் வந்துள்ளது.

புகாரை அடுத்து, தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், அமெரிக்கன் ஆஸ்பத்திரி ஆகிய பகுதிகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில் ராஜ், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், பால்வளத் துறை அதிகாரிகள், தொழிலாளர் நலத்துறை மற்றும் மாநகராட்சி, காவல்துறை அதிகாரிகளுடன் மற்றும் மாநகராட்சி ஆணையர் தினேஷ் குமார் ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனை மேற்கொண்டதில், பாலில் தண்ணீர் மற்றும் ரசாயனம் கலக்கப்படுவது தெரிய வந்துள்ளது. இதையடுத்து சுமார் 1,500 லிட்டர் பாலை உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் ரசாயனம் கலந்து விற்பனை செய்ய இருந்த பாலை அதிகாரிகள் அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதனைத் தொடர்ந்து கலப்படம் செய்து விற்பனை செய்யக்கூடிய இடத்தை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார். பின்னர் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பாலில் கலப்படம் செய்து விற்பனை செய்வது தவறு. பொது மக்களுக்கு விநியோகம் செய்யும் பாலில் கலப்படம் செய்யாமல் கொடுக்க வேண்டும்" என்றார்.

மேலும், பால் விற்பனையாளர்கள் கொண்டு வரும் அளவீடு கருவிகள் சரியில்லை எனவும், 500 எம்.எல் என்பதற்கு பதில் 450 எம்.எமல் வைத்து மோசடி செய்வதாகவும் கூறினார். இது தொடர்பாக மாவட்டம் முழுவதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும் மக்களுக்கு தரமான பால் கிடைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், கலப்படத்தை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

இதனைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி மாரியப்பன் பேசுகையில், தற்போது நடத்தப்பட்ட சோதனையில் பசும் பாலில் தண்ணீர் மற்றும் கெமிக்கல் கலக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

மேலும், பொதுமக்கள் பயன்படுத்தும் பசும்பாலில் தண்ணீர் மற்றும் மால்டோ டெக்ஸன் உள்ளிட்ட கலப்படங்களை கலந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரி, இப்படி வாங்கும் பசும் பாலை வீட்டில் சரியாக கொதிக்க வைத்து குடிக்கவில்லை என்றால் வயிற்றுப் போக்கு, இரைப்பை கோளாறு ஆகிய பிரச்னைகள் ஏற்படும் என்று கூறினார்.

இதையும் படிங்க: "ஏலே பித்தாள.. பித்தாளன்னு கத்தினேன்.. பறந்துட்டான்..!" மூதாட்டியின் வீடியோ வைரல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.