ETV Bharat / state

இந்திய ஹாக்கி அணிக்கான பயிற்சி முகாமில் தூத்துக்குடி இளைஞர்! - training camp for the Indian hockey team

ஜுனியர் ஆண்கள் உலக்கோப்பை ஹாக்கி போட்டிக்கான இந்திய அணி பயிற்சி முகாமிற்கு, கோவில்பட்டியை சேர்ந்த மாரிஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

Thoothukudi
தூத்துக்குடி இளைஞர்
author img

By

Published : Jun 13, 2021, 2:28 PM IST

தூத்துக்குடி: கோவில்பட்டியை சேர்ந்த தீப்பெட்டி தொழிலாளர்கள் சக்திவேல், சங்கரி தம்பதியின் மகன் மாரிஸ்வரன். இவருக்கு பள்ளி காலம் முதல் ஹாக்கி விளையாட்டு மீது தீராத காதல் உண்டு.

தற்போது, கோவில்பட்டி அரசு கல்லூரியில் பயின்று வரும் இவர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மாணவர் விடுதி அணிக்காக விளையாடி வந்தார்

தொடர்ந்து, மத்திய அரசின் ஹீலோ திட்டத்தின் கீழ் நடைபெற்ற தேசிய அளவிலான ஹாக்கி போட்டியில் மாரிஸ்வரன் சிறப்பாக விளையாடிய காரணத்தினால், கடந்தாண்டு டிசம்பர் 25ஆம் தேதி முதல் இந்தாண்டு ஜனவரி 18ஆம் தேதி வரை பெங்களூரில் நடைபெற்ற இந்திய ஜீனியர் ஹாக்கி அணி பயிற்சி முகாமில் கலந்து கொண்டார்.

Thoothukudi
பயிற்சி முகாமில் கால் பதிக்கும் தூத்துக்குடி இளைஞர்

ஹாக்கி அணி பயிற்சி முகாமில் மாரிஸ்வரன்

சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஹாக்கி அணி பயிற்சி முகாமிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர் மாரிஸ்வரன் என்பது குறிப்பிடத்தக்கது. தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, முன்னாள் செய்தி துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் மாரிஸ்வரனுக்கு தேவையான உதவிகளை செய்கின்றனர்.

ஜுனியர் ஆண்கள் உலக்கோப்பை ஹாக்கி போட்டி

மேலும், இந்தாண்டு இறுதியில் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெறவுள்ள ஜுனியர் ஆண்கள் உலக்கோப்பை ஹாக்கி போட்டிக்கான பயிற்சி முகாம் இன்று (ஜுன்.13) பெங்களூருவில் தொடங்கி நடைபெறவுள்ளது.

இந்த பயிற்சி முகாமிற்கு மாரிஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் நிச்சயம் ஜூனியர் ஹாக்கி அணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவது உறுதி என்று ஹாக்கி பயிற்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Thoothukudi
குடும்பத்தினருடன் மாரிஸ்வரன்

'கருணாநிதி : எ லைஃப்' புத்தகம்

இந்நிலையில், சென்னையில் கனிமொழி எம்.பி.யை மாரிஸ்வரன் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மாரிஸ்வரனுக்கு, ஏ.எஸ்.பன்னீர்செல்வன் எழுதிய 'கருணாநிதி : எ லைஃப்' என்ற புத்தகம் மற்றும் நிதியுதவியை வழங்கி கனிமொழி பாராட்டினார்.

கனிமொழி எம்.பி பாராட்டு

மேலும், சிறப்பாக விளையாடி பிற்காலத்தில் அதிகளவிலான தமிழக வீரர்கள் இந்திய அணியில் இடம் பிடிப்பதற்கு முன்மாதிரியாக விளங்க வேண்டும் என வாழ்த்தினார்.

kani
புத்தகம் பரிசளித்த கனிமொழி எம்.பி

இந்நிகழ்வின் போது, தமிழ்நாடு ஹாக்கி சம்மேளனத்தின் தலைவர் சேகர் ஜே.மனோகரன், பொதுச் செயலாளர் எம்.ரேனுகாலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: டிராவில் முடிந்தது இந்திய அணி பயிற்சி ஆட்டம்: குவாரன்டைனுக்குப் பின் வீரர்கள் உற்சாகம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.