ETV Bharat / state

'புதிய கால்நடை மருத்துவக்கல்லூரி சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் விரைவில் வெளியிடப்படும்'

author img

By

Published : Oct 21, 2020, 10:27 PM IST

புதிய கால்நடை மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

new veterinary college admission
'புதிய கால்நடை மருத்துவக்கல்லூரி சேர்க்கைக்கான தரவரிசைப்பட்டியல் விரைவில் வெளியிடப்படும்'- கால்நடைத் துறை அமைச்சர்

தூத்துக்குடி: தமிழ்நாடு அரசு சார்பில் நகரும் நியாய விலைக்கடைகள் மாவட்டம்தோறும் தொடங்கிவைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்திலும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக அம்மா நகரும் நியாய விலைக் கடை தொடக்க விழா, தூத்துக்குடி கூட்டுறவு சங்கத்தில் கடனுதவி வழங்கும் விழா இன்று (அக்டோபர் 21) நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை தொடங்கிவைத்தனர். தூத்துக்குடி மத்திய கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற கடனுதவி வழங்கும் விழாவில் விவசாயிகளுக்கு வங்கிக் கடனுதவியின் பேரில் டிராக்டர்களை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார். இதைத்தொடர்ந்து கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்புக்காக வங்கிக்கடன் உதவிகள் வழங்கப்பட்டன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கால்நடைத்துறை அமைச்சர், "தமிழ்நாடு முழுவதும் 1,554 கால்நடை மருத்துவர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கால்நடை மருத்துவர்கள் பணி நியமனத்தில் வெளிப்படைத் தன்மையை உருவாக்கி தமிழ்நாடு அரசு வழிவகை செய்து கொடுத்துள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு இந்த நான்கு ஆண்டுகளில் கால்நடை பராமரிப்பு துறை மூலமாக 250 கால்நடை பராமரிப்பு கிளை நிலையங்களை அரசு அமைத்துள்ளது.

கால்நடைத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பேட்டி

அதே போல இந்தாண்டு மூன்று கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களை அமைத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் தலைவாசலில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா அமைய உள்ளது. இரண்டாவதாக தேனி மாவட்டம் வீரபாண்டியில் 283 கோடி ரூபாயில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையமும், மூன்றாவதாக திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதியில் 133 கோடி ரூபாய் மதிப்பிலும் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட உள்ளது.

இந்த மூன்று கால்நடை மருத்துவக் கல்லூரியிலும் மாணவர் சேர்க்கை இந்த ஆண்டே நடைபெறும். அதற்காக 15,654 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவை பரிசீலிக்கப்பட்டு தரவரிசை தயார் நிலையில் உள்ளது. விரைவில் கால்நடை மருத்துவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்" என்றார்.

இதையும் படிங்க: கிசான் திட்ட முறைகேடு பணம் 86% திரும்பப் பெறப்பட்டுள்ளது - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.