கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து நகரில் உள்ள பூங்காக்கள் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் அதிகம் கூடக் கூடிய மருத்துவமனை, கோயில்கள், மற்றும் வணிக வளாகங்களில் மாநகராட்சி சார்பில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
கரோனா வைரஸ் தாக்கத்தினால், தூத்துக்குடியில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்தே காணப்படுகிறது.
இதையும் படிங்க: கோவிட்-19 எதிரொலி: திமுக பொதுக்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு