ETV Bharat / state

ஸ்டெர்லைட்: 2ஆவது ஆலை கட்டப்படும் இடத்தில் மத்தியக் குழு ஆய்வு - sterlite extension

தூத்துக்குடி: இரண்டாவது சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு முன்பாக ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக வழங்கப்பட்டதாக கூறப்படும் நிலத்தில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை மத்திய சுற்றுச்சூழல் குழு ஆய்வு மேற்கொண்டது.

சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்துராமன்
author img

By

Published : Apr 25, 2019, 9:21 AM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாவது சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு முன்பாகவே, ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு இரண்டாவது காப்பர் ஆலை அமைக்க சட்டவிரோதமாக நிலம் வழங்கியதாக புகார் எழுந்தது. நெல்லையைச் சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலர் முத்துராமன், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் புகார் கொடுத்ததின் பேரில் மத்திய சுற்றுசூழல் அமைச்சக குழு அப்பகுதியை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது. இதன்படி மத்திய சுற்றுச் சூழல் அமைச்சக இயக்குனர் கலியபெருமாள், ஆராய்ச்சியாளர் பிரிஜிலால் தலைமையிலான குழு, நேற்று ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ஆய்வுக் குழுவினர், ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்காக வழங்கப்பட்ட இடத்தில் அடிப்படை கட்டுமானப் பணிகள் மட்டுமே நடைபெற்றுள்ளன. தற்போது எந்த வேலையும் நடைபெறவில்லை என்றனர்.

சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்துராமன், சிப்காட் விரிவாக்கத்திற்காக மொத்தம் 1,616 ஏக்கர் நிலம் கோரப்பட்டுள்ளது. இதில் 1242 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறுவதற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், நகர் ஊரமைப்புத்துறை உள்ளிட்டவற்றின் அனுமதி எதுவும் இல்லாமலேயே தூத்துக்குடி சிப்காட் அமைப்பானது 324 ஏக்கர் நிலத்தை ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு வழங்கியுள்ளது. ஆய்வில் ஸ்டெர்லைட் ஆலையினுள் கட்டுமானப் பணிகள் நடந்திருப்பது உண்மைதான் எனக் கூறியுள்ளனர். இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Intro:Body:

தூத்துக்குடி மாவட்டத்தில் சிப்காட் இரண்டாவது தொழிற்பேட்டை அமைப்பதற்கு முன்பாகவே, ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு இரண்டாவது காப்பர் ஆலை அமைக்க சட்டவிரோதமாக நிலம் வழங்கியமைக்கு நடவடிக்கை எடுக்க  கோரி நெல்லையை சேர்ந்த சுற்றுசூழல் ஆர்வலர் முத்துராமன், மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்திடம் புகார் கொடுத்ததின் பேரில் மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்தின் சென்னை அலுவலகம் குழு அமைத்து சம்பவ பகுதிகளை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

இந்த குழு இன்று 24.04.19 தேதி ஸ்டெர்லைட் ஆலையில் சம்பவ பகுதிகளை ஆய்வு செய்ய மத்திய சுற்று சூழல் அமைச்சக இயக்குனர் கலியபெருமாள், ஆராய்ச்சியாளர் பிரிஜிலால் தலைமையில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், சிப்காட் அதிகாரிகள், மனுதாரர் முத்துராமன் ஆகியோர் கலந்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப்பகுதியில் மத்திய சுற்று சூழல் அமைச்சக இயக்குனர் கலியபெருமாள், ஆராய்ச்சியாளர் பிரிஜிலால் தலைமையிலான அதிகாரிகள் இன்று ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்கு பின்னர் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இயக்குனர் கலியபெருமாள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவர் கூறுகையில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெறாமலேயே தூத்துக்குடியில் இரண்டாவது  கட்டமாக சிப்காட் விரிவாக்கத்திற்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு தொழிற்சாலைகளுக்கு சட்டவிரோதமாக நிலம் வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்துராமன் அளித்த புகாரின் அடிப்படையில் நாங்கள் இங்கு ஆய்வு செய்தோம்.

ஆய்வின் அடிப்படையில் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்காக வழங்கப்பட்ட இடத்தில் கட்டுமானப் பணிகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதாவது மின்சார இணைப்புக்கான அறைகள், ஓய்வு அறைகள், வாகன நிறுத்தும் செட் போன்ற அமைப்புகள் மற்றும் அடித்தளம் அமைப்பதற்கான பவுண்டேஷன் போன்ற கட்டுமான பணிகள் நடைபெற்றுள்ளன. தற்போது எந்த வேலையும் நடைபெறவில்லை. இந்த ஆய்வு அறிக்கைகள் அனைத்தும் டெல்லியில் உள்ள மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகத்தில் சமர்ப்பிக்கப்படும். அதன்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள். இந்த ஆய்வானது என்று ஒரு நாள் முழுதும் நடத்தப்படும் என கூறினார்.

தொடர்ந்து சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்துராமன் கூறுகையில்,

சிப்காட் விரிவாக்கத்திற்காக மொத்தம் 1,616 ஏக்கர் நிலம் கோரப்பட்டுள்ளது. இதில் 1242 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறுவதற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம், மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், நகர் ஊரமைப்புத்துறை உள்ளிட்டவற்றின் அனுமதி எதுவும் இல்லாமலேயே தூத்துக்குடி சிப்காட் அமைப்பானது 324 ஏக்கர் நிலத்தை ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு வழங்கியுள்ளது. இந்த நிலத்தில் ஸ்டெர்லைட் ஆலை சட்டவிரோதமாக கட்டுமானப் பணிகளையும் மேற்கொண்டு உள்ளது. இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நான் புகார் அளித்தேன். அதன்பேரில் அதிகாரிகள் இங்கு வந்து ஆய்வு நடத்துகின்றனர். அதிகாரிகளின் ஆய்வில் ஸ்டெர்லைட் ஆலையினுள் கட்டுமான பணிகள் நடந்திருப்பது உண்மைதான் என கூறியுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

புகார்தாரரான முத்துராமனை, அதிகாரிகள் ஆய்வு நடத்தும் சமயத்தில் ஆலையினுள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். பின்னர் செய்தியாளர்களின் தலையீட்டுக்கு பின்னர் அவர் ஆய்வுக்காக ஆலையினுள் அழைத்துச் செல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.