ETV Bharat / state

திருச்செந்தூர் வைகாசி விசாக திருவிழா: சாதி அடையாளங்கள், சர்ப்ப காவடி எடுக்க கூடாது.. காவல்துறை அறிவிப்பு என்ன?

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் வைகாசி விசாக திருவிழாவுக்கு பக்தர்கள் சாதி அடையாளங்கள் பொறிக்கப்பட்ட உடைகளை அணிந்து வரக்கூடாது என்றும், சர்ப்பக் காவடி எடுத்து வரக்கூடாது என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அறிவுறுத்தியுள்ளார். இதனை மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

Vaikasi Visakha Festival
தூத்துக்குடி
author img

By

Published : May 31, 2023, 4:15 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வரும் 2-ஆம் தேதி வைகாசி விசாகத் திருவிழா நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவிற்கு பக்தர்கள் பாதயாத்திரையாக சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு சென்று வழிபடுவது வழக்கம்.

அதன்படி, வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட சாலை வழியாக மாலை மற்றும் இரவு நேரங்களில் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர்.

இதனால், சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். பக்தர்கள் சாலைகளில் இடது புறம் குழுவாக செல்வதால், வாகனங்கள் அவர்கள் மீது மோதாமல் இருக்க வலது புறம் முந்திச் செல்வதால் விபத்துகள் ஏற்படுகின்றன. சில நேரங்களில் விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.

இதுபோன்ற விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு, மோட்டார் வாகனச்சட்டம் சாலை விதிகள் மற்றும் வழிமுறைகள் சட்டத்தின் படி பாதசாரிகள் எப்போதும் சாலையில் வலது புறமாகவே நடந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அப்போதுதான் எதிரே இடது புறமாக வரும் வாகனங்களை கண்டுகொண்டு விபத்து நேராத வண்ணம் பக்தர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதோடு மற்ற வாகனங்களுக்கும் இடையூறு இல்லாமல் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளளாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பாத யாத்திரை செல்லும் பக்தர்கள் கூடுமானவரை இரவு நேரங்களில் பாதுகாப்பான இடங்களில் தங்கி விட்டு பகல் நேரத்தில் பாத யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஒருவேளை இரவு நேரத்தில் பாதயாத்திரை மேற்கொண்டால் முதுகு பகுதி மற்றும் தோல் பைகளில் ஒளிரும் ஸ்டிக்கர்களை (Reflect Sticker) ஒட்டிக் கொண்டு பாதுகாப்பாக பாதயாத்திரை செல்ல வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், திருக்கோவிலுக்கு இறைவழிபாட்டுக்காக வரும் பக்தர்கள் சாதி ரீதியான அடையாளங்கள் பொறிக்கப்பட்ட பனியன்கள், சட்டைகள் போன்றவற்றை அணிந்து வரவோ, அதை வெளிப்படுத்தும் வகையிலான கொடிகளையோ கொண்டு வரக்கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளார். அதேபோல் கோயிலுக்கு சர்ப்ப காவடி மற்றும் பாம்புகளை எடுத்து வரக்கூடாது எனவும், மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்த வைகாசி விசாக திருவிழாவை அமைதியாகவும், பாதுகாப்பாகவும், சிறப்புடனும் கொண்டாட பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் அனைத்து சமுதாய தலைவர்களும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: தருமபுர ஆதீனத்தில் பட்டணப்பிரவேச விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.