ETV Bharat / state

தூத்துக்குடியில் இயங்கும் உரிமம் இல்லாத 68 பார் மீது நடவடிக்கை எடுக்க பாஜகவினர் கோரிக்கை - அரசு மதுபான கடை

தூத்துக்குடி மாவட்டத்தில் உரிமம் இன்றி இயங்கி வரும் 68 பார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பாஜகவினர் மனு அளித்து உள்ளனர்.

தூத்துக்குடியில் செந்தில் பாலாஜி ஆதரவுடன் இயங்கும் 68 உரிமை இல்லாத பார் கடைகள்
தூத்துக்குடியில் இயங்கும் உரிமம் இல்லாத 68 பார் மீது நடவடிக்கை எடுக்க பாஜகவினர் கோரிக்கை
author img

By

Published : Jun 3, 2023, 6:57 PM IST

தூத்துக்குடியில் இயங்கும் உரிமம் இல்லாத 68 பார் மீது நடவடிக்கை எடுக்க பாஜகவினர் கோரிக்கை

தூத்துக்குடி: மாவட்டம் முழுவதும் விதிமுறைகளை மீறி உரிமம் இன்றி இயங்கி வரும் 68 டாஸ்மாக் மதுபான கூடங்களை அகற்ற கோரி தெற்கு மாவட்ட பாஜகவினர் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மேலும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்காவிட்டால் டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தை முற்றுகை இடப் போவதாகவும் எச்சரித்து உள்ளனர்.

தூத்துக்குடி மாவட்ட பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த மகேஸ்வரன் என்பவர் தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு அனுமதியுடன் இயங்கி வரும் மதுபான கூடங்களின் எண்ணிக்கை குறித்து டாஸ்மாக் மேளாளரிடம் தகவல்களை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கங்களைக் கேட்டிருந்தார். இதற்கான விளக்கங்கள் அவருக்கு அளிக்கப்பட்டு இருந்தது.

அதில், தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 142 அரசு மதுபான கடைகளில் 74 கடைகளுக்கு மட்டுமே பார் உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 68 கடைகள் பார் இல்லாத கடைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த 68 கடைகளிலும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆதரவுடன் பார் நடத்தப்பட்டு வருவதாக பாஜகவினர் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் பாரதிய ஜனதா கட்சியினர் மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில் ராஜிடம் மனு அளித்தனர். அவர்களது மனுவில், தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 142 அரசு மதுபான கடைகளில் அனுமதி இல்லாமல் இயங்கி வரும் 68 மதுபான கூடங்களை உடனே அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுமட்டும் இன்றி உடனடியாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அருகே உள்ள அரசு மதுபான கடைகளை அகற்ற வேண்டும். வரும் 15 தினங்களுக்குள் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுக்க விட்டால் டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முற்றுகையிடப்படும் பாரதிய ஜனதா கட்சியினர் அறிவித்து இருந்தனர்.

ஆட்சியரிடம் மனு அளித்த பிறகு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “தகவல் அறியும் சட்டத்தின் கீழ் 148 பார்களில் 68 பார்கள் உரிமம் இல்லாமல் செயல்பட்டு வருவது தெரியவந்து உள்ளது.

இதனை தடுத்து நிறுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுக்கொடுத்துள்ளோம். 15 நாட்களுக்குள் இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்துள்ளார். 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்” என்று எச்சரித்தார்.

இதையும் படிங்க: வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க தியாகி சங்கரலிங்கனார் நினைவு நாளில் போராட்டம் - வழக்கறிஞர் பகவத்சிங்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.