ETV Bharat / state

வியாபாரிகள் கொலையில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸார் மீது நடவடிக்கை வேண்டும் - வழக்குரைஞர்

தூத்துக்குடி: சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸார் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்குரைஞர் அதிசயக்குமார் தெரிவித்துள்ளார்.

வழக்கறிஞர் அதிசயக்குமார் ஈடிவி பாரத் இணையதள ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி

author img

By

Published : Jul 9, 2020, 11:59 PM IST

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஜெயராஜ் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவலில் உயிரிழந்த விவகாரத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினர் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆகவே தமிழ்நாடு முழுவதும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தடை விதித்து அரசு அரசாணை பிறப்பித்தது.

இதுதொடர்பாக வழக்குரைஞர் அதிசயக்குமார் ஈடிவி பாரத் இணையதள ஊடகத்திடம் கூறும்போது, "சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் கடந்த 19ஆம் தேதி இரவு காவலர்களால் அடித்து துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்திற்கு பின்னர் வெளியான வாட்ஸ்அப் உரையாடல் மூலமாக பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் காவலர்களுடன் உடந்தையாக இருந்தது வெளி உலகுக்கு தெரியவந்தது.

வழக்குரைஞர் அதிசயக்குமார் ஈடிவி பாரத் இணையதள ஊடகத்திற்கு சிறப்பு பேட்டி
எனவே இதுகுறித்து மனித உரிமை ஆணையத்தில் நான் அளித்த புகாரின் பேரில், 4 கேள்விகள் அடங்கிய சம்மனை நீதிபதி ஜெயச்சந்திரன் தமிழ்நாடு உள்துறை செயலாளர், முதன்மை செயலாளருக்கு அனுப்பி பதிலளிக்க கூறியிருந்தார்.
இதன் விளைவாக தமிழ்நாடு முழுவதும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு அரசு தடை விதித்துள்ளது. பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்புக்கு தடை விதிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல் ஜெயராஜ், பென்னிக்ஸ் உயிரிழப்புக்கு காரணமான பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: சாத்தான்குளம் வழக்கில் மேலும் 5 காவலர்கள் கைது!

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.