ETV Bharat / state

சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கு.. ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு! - மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன்

Court awarded life imprisonment to the accused in POCSO case: தூத்துக்குடி மாவட்டம் தட்டப்பாறையில் சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் கைதான நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

சுடலைமணி
சுடலைமணி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 29, 2023, 9:12 AM IST

தூத்துக்குடி: தட்டப்பாறை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

கடந்த 2014 ஆம் ஆண்டு 15 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கில் தட்டப்பாறை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மகிழம்புரம் பகுதியைச் சேர்ந்த பெருமாள் மகன் சுடலைமணி (வயது 35) என்பவரை தட்டப்பாறை காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இதையும் படிங்க: Neet exam: கல்வியை சீர்குலைத்து, கல்வி கட்டமைப்பை அழிக்க வந்ததே நீட் தேர்வு - சபாநாயகர் அப்பாவு

இந்த வழக்கை அப்போதைய தட்டப்பாறை காவல் நிலைய (பொறுப்பு) ஆய்வாளர்கள் பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர், வனிதா ராணி மற்றும் சாந்தகுமாரி ஆகியோர் புலன் விசாரணை செய்து கடந்த 11.05.2016 அன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். இவ்வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன் நேற்று (ஆகஸ்ட் 28) குற்றம் சுமத்தப்பட்ட சுடலைமணி என்பவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 11 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய தட்டப்பாறை காவல் நிலைய காவல் ஆய்வாளர்கள் பெலிக்ஸ் சுரேஷ் பீட்டர், வனிதா ராணி, சாந்தகுமாரி ஆகியோரையும், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முத்துலெட்சுமிக்கும், விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை பெண் காவலர் கலா மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர் மகேஸ்வரி ஆகியோருக்கும் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க: வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சம் வாங்கிய டிஎஸ்பிக்கு 2 ஆண்டு சிறை... தூத்துக்குடி நீதிமன்றம் அதிரடி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.