தூத்துக்குடியில் பரதர் சங்க நிர்வாகிகள் குரூஸ் பர்னாந்துக்கு மணிமண்டபம் கேட்டு தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் அதன் நிர்வாகிகள் கூறும்போது, 'தூத்துக்குடி நகருக்கு தண்ணீரைப் பெற்றுத்தந்தவர் குரூஸ் பர்னாந்து. அவர் தூத்துக்குடி மாநகரில் பல்வேறு சமுதாயத்தினரும் பயன்பெறும் வகையில் 16 மைய வாடி கட்டடங்களையும் கட்டிக் கொடுத்துள்ளார்' என்றார்.
தொடர்ந்து, 'அவருடைய புகழை கொண்டாடும் வகையில் குரூஸ் பர்னாந்துவின் 150ஆவது பிறந்தநாளை வருகிற 15, 16 ஆகிய இரு தேதிகளில் சிறப்பாகக் கொண்டாட உள்ளோம். 15ஆம் தேதி குரூஸ் பர்னாந்து சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்படவிருக்கிறது. 16ஆம் தேதி, அனைத்து அரசியல் கட்சித் தலைவர்கள், கன்னியாகுமரி முதல் ராமநாதபுரம் வரை கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களை அழைத்து சிறப்புக் கூட்டம் நடத்த உள்ளோம்' எனக் கூறினார்.
மேலும், 'குரூஸ் பர்னாந்து புகழைப் பரப்பும் வகையில், அவருக்கு தமிழ்நாடு அரசு மணிமண்டபம் அமைத்துத் தர வேண்டும்' எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: இத்தனை நாள்களாக தலைவர்கள் சிலை... இன்று திருவள்ளுவர் சிலைக்கே இப்படியா!