ETV Bharat / state

மரியே வாழ்க..மரியே வாழ்க..விண்ணை பிளந்த துதி! களைகட்டிய பனிமயமாதா தங்கத்தேர் பவனி..!

தூத்துக்குடியில் கோலாகலமாக நடந்த பனிமயமாதா பேராலய தங்கத் தேரோட்ட திருவிழா, பல்வேறு இடங்களில் இருந்து சொந்த ஊரில் குவிந்த மக்கள். தூய மரிய மாதாவை துதித்து எழுப்பிய கோஷங்கள் விண்ணை பிளந்தன.

கலைகட்டிய பனிமயமாதா தங்கத்தேர் பவனி..!
கலைகட்டிய பனிமயமாதா தங்கத்தேர் பவனி..!
author img

By

Published : Aug 5, 2023, 6:05 PM IST

களைகட்டிய பனிமயமாதா தங்கத்தேர் பவனி..!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்து உள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமயமாதா பேராலய திருவிழா ஆண்டுதோறும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், இலங்கை, மலேசியா போன்ற வெளிநாடுகளில் இருந்தும் சாதி, மதம், இன பாகுபாடின்றி லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர்.

அந்த வகையில், 441-வது ஆண்டு திருவிழா கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து விழா நாட்களில் ஜெபமாலை, மறையுரை, அருள் ஆசீர், நற்கருணை ஆசீர் மற்றும் சிறப்பு திருப்பலிகள் நடந்து வந்தன. ஒவ்வொரு நாளும் பிஷப் தலைமையில் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. பனிமயமாதா பேராலயத்தில், முக்கிய நிகழ்வுகளை முன்னிட்டு தங்கத் தேரோட்டம் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இதுவரை 15 முறை தங்கத் தேரோட்டம் நடைபெற்றுள்ள நிலையில், இந்த ஆண்டு 16-வது தங்கத் தேரோட்ட விழா நடைபெற்றது.

குறிப்பாக இந்த தங்கத் தேரானது 1 கோடியே 50 லட்சம் மதிப்பில் 53 அடி உயரத்தில் செய்யப்பட்டு உள்ளது. மேலும் ஜப்பான் நாட்டிலிருந்து தங்க தேர் அலங்காரத்திற்காகத் தங்க இழைகள் வரவழைக்கப்பட்டும், அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட டைமண்ட் கற்கள் இத்தேரில் பதிக்கப்பட்டும் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

மேலும் இந்த தேரோட்ட நிகழ்வு இன்று அதிகாலை 5.15 மணிக்கு பிஷப் ஸ்டீபன் தலைமையில் பெருவிழா கூட்டு திருப்பலியும், 7 மணிக்குக் கோவா உயர் மறைமாவட்ட பிஷப் கார்டினல் பிலிப்நேரி தலைமையில் தங்கத்தேர் சிறப்பு திருப்பலியும் நடைபெற்றது. தொடர்ந்து கோவை பிஷப் தாமஸ் அக்குவினாஸ், இலங்கை மன்னார் பிஷப் இமானுவேல் பெர்னாண்டோ ஆகியோர் அர்ச்சிப்பு செய்ய அன்னையின் தங்கத்தேர்ப் பவனி வெகு விமர்சையாக நடைபெற்றது.

திருவிழாவைக் காண வரும் பக்தர்களின் வசதிக்காக மாநகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் குடிநீர், கழிவறை, மருத்துவம், தீயணைப்புத்துறை, சுகாதாரத்துறை சார்ந்த அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு தயார் நிலையில் இருந்தன. மேலும் போக்குவரத்து நெரிசலைத் தடுக்க பனிமய மாதா கோவில் அருகில் பல்வேறு இடங்களில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருந்தது. குறிப்பாக பனிமயமாதா பேராலய திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காக ஆகஸ்ட் 5ம் தேதி சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கும், ஆகஸ்ட் 6ம் தேதி விழா முடிந்து தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கும் சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

திருவிழாவில் பங்கேற்ற பக்தர் ஜூடு கூறுகையில், குறிப்பிட்ட நிகழ்ச்சிக்காக மட்டுமே தங்க தேர் ஓடுவது வழக்கம், இந்த ஆண்டு 100வது மறைமாவட்ட ஆண்டு விழாவை முன்னிட்டு, தங்க தேர் பவனி நடைபெற்றது. பல்வேறு மக்கள் ஜாதி, இனம் கடந்து வெளிமாநிலம், வெளிநாட்டில் இருந்து வந்து செல்கின்றனர்" என கூறினார்.

பின்னர், ஜெய் ஸ்ரீ என்பவர் கூறுகையில், "ஊர் திருவிழாவாக கொண்டாடி வருகிறோம். பல்வேறு தரப்பு மக்களும் வந்து செல்கின்றனர். 10 வருடம் கழித்து தங்க தேர் ஓடுவதால் மனதுக்கு மிகவும் ஆறுதலாகவும், பிரமிப்பாகவும் உள்ளது என்று கூறினார். தொடர்ந்து, தெலங்கானாவில் இருந்து வருகை தந்த செல்வி என்பவர் கூறுகையில், ஓவ்வொரு வருடமும் திருவிழா நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில் குடும்பமாக வந்து செல்வோம். தெலங்கானாவில் இருந்து வர டிக்கெட் இல்லாததால் காரிலே பயணம் செய்து வந்தோம். தூத்துக்குடி மண்ணில் பிறந்ததற்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.

மேலும், பனிமயமாதா திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்க பக்தர்களின் வசதிக்காக ஆகஸ்ட் 05ஆம் தேதி சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கும், ஆகஸ்ட் 6ஆம் தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கும் சிறப்பு ரெயில் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அண்ணாமலையார் கோயிலில் குத்துவிளக்கு பூஜை.. 308 பெண்கள் பங்கேற்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.