தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் நுழைவாயில் முன்பு நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் ஆய்வாளரின் வாகனம் அச்சு ஒடிந்து சரிந்தது.
இதில் ஜீப் ஓட்டுநர் நல்வாய்ப்பாகக் காயமின்றி தப்பினார். இந்நிலையில் பழுதான காவல் துறை வாகனம் தொடர்ந்து 12 மணி நேரத்துக்கு மேலாக பேருந்து நிலையம் நுழைவாயிலில் நின்று கொண்டிருந்ததால் பேருந்து நிலையத்திற்குள் வரவேண்டிய அரசுப் பேருந்துகள் உள்ளே நுழைய முடியாமல் பயணிகளை முக்கியச் சாலை வழியாக இறக்கிவருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பொதுமக்களுடைய வாகனம் அப்பகுதியில் சில நிமிடங்கள் நின்றால் உடனடியாக அப்புறப்படுத்த சொல்லும் காவல் துறையினர், தங்களது வாகனத்தை 12 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்திவைத்திருப்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: தூத்துக்குடி மீன்பிடி துறைமுகம் மூடப்பட்டது: காரணம் என்ன?