தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை அருகே உள்ள தெற்கு பொம்மையாபுரத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன்(22). இவர் மீது கொலை,கொலை முயற்சி என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் வழக்கு தொடர்பாக கோவில்பட்டிக்கு சென்ற பாலமுருகன், அவருடைய உறவினரை பார்க்க காந்தி நகர் பகுதிக்கு சென்றுள்ளார். அங்கு அவரை சந்தித்துவிட்டு காந்திநகர் பகுதியில் வரும் போது, இருச்சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் பாலமுருகனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், ரத்த வெள்ளத்தில் இருந்த பாலமுருகனை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பாலமுருகனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு
அனுப்பி வைக்கப்பட்டார்.
இதுகுறித்து மேற்கு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க:
திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த பெண் மென்பொறியாளர் மீது தாக்குதல்