தூத்துக்குடி நகராட்சியை மாநகராட்சியாக அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி கடந்த 2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி துவக்கி வைத்தார். இந்நிலையில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு நேற்றுடன் 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.
தூத்துக்குடி மாநகராட்சி மேயராக 2008 - 2011 திமுகவை சேர்ந்த கஸ்தூரி தங்கம், 2011 - 2014 அதிமுகவை சேர்ந்த சசிகலா புஷ்பா, 2014 - 2016 அதிமுக அந்தோணி கிரேஸ், பதவி வகித்தனர். தற்போது திமுகவை சேர்ந்த என்.பி.ஜெகன் பதவி வகித்து வருகிறார்.
தூத்துக்குடி மாநகராட்சியில், 4 மண்டலங்கள் 60 வார்டுகள் உள்ளன. தூத்துக்குடி மாநகராட்சி தரைவழி, கடல்வழி, ரயில் வழி, வான்வெளி ஆகிய நான்கு போக்குவரத்து வசதிகளுடன் இந்தியாவின் 10வது துறைமுக மாநகராட்சியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: திருச்செந்தூா் கோவிலில் யானைக்கு பச்சரிசி மாவு பூசி சிறப்பு வழிபாடு!!