தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆதிச்சநல்லூரில் தொல்லியல் அருங்காட்சியக அடிக்கல் நாட்டு விழா இன்று (ஆகஸ்ட் 5) நடைபெற்றது. இந்த நிகழ்வில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கலந்து கொண்டு உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்வில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி முன்னிலை வகித்து பேசுகையில், “மக்களுடைய வாழ்வின் தொன்மை தமிழுக்கு தனி சிறப்பு உண்டு. நம்முடைய மூதாதையர்கள் எப்படி வாழ்ந்தார்கள். அவர்களுடைய வாழ்வு எப்படி இருந்தது. அந்த மக்களுடைய பழக்க வழக்கங்கள் எப்படி இருந்தது. வாழ்க்கையில் என்னென்ன சாதனைகள் செய்திருக்கின்றனர் என்பதை இந்த அகழ்வாய்வு வழியாக நாம் தெரிந்து கொள்ள முடியும்.
ஆதிச்சநல்லூரில் நடந்து கொண்டிருக்க கூடிய அகழ்வாராய்வுகள் என்பது நாட்டில் மிக முக்கியமான ஒன்று, 100 ஆண்டுகளுக்குப் பிறகு அலெக்சாண்டர் ரியா செய்திருக்கக் கூடிய அந்த அகழ்வாராய்ச்சிக்கு பின் தற்போது மறுபடியும் இங்கு அகழ்வாராய்ச்சிகள் தொடங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: திமுக உறுப்பினர் கைது!
மக்கள் புதைக்கப்பட்ட இடங்களில் அகழ்வாராய்வு நடக்கப்பட்டு அங்கிருந்து கிடைக்கக்கூடிய அந்த பொருட்களை இன்னும் சைட் மியூசியம் கண்ணாடி பேழையில் நின்று கொண்டு அந்த இடங்களில் என்ன இருக்கின்றது என்பதை மிக அருகில் சென்று பார்க்கக் கூடிய வகையில் இந்த மியூசியம் அமைக்கப்பட்டு இருக்கிறது.
மக்கள் வாழ்ந்து கொண்டு இருக்கக்கூடிய இங்கு சுற்றி இருக்கக்கூடிய இடங்களில் அகழாய்வுகள் நடந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் தமிழகத்தில் பராக்கிரம பாண்டியபுரம் என்ற இடம் கண்டுபிடிக்கப்படாத அளவில் மிகப் பெரிய மதில் சுவர் அங்கு கட்டப்பட்டு அதற்கு உள்ளே மக்கள் வாழ்ந்து இருக்கிறார்கள் என்று ஆதாரம் நமக்கு கிடைத்திருக்கிறது.
இப்படி மிக சுவாரசியமாக இருக்கக்கூடிய பல்வேறு விஷயங்களை இங்கே இருக்கக்கூடிய அகழ்வாராய்ச்சிகள் நமக்கு தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்கிறது. ஆதிச்சநல்லூர் அகழாய்வுகள் என்பது ஊர் கூடி இழுத்து இருக்கக்கூடிய ஒரு தேர் ஆகும்.
மத்திய அரசு தமிழக அரசு என்று ஆய்வாளர்கள் எழுத்தாளர்கள் ஆசிரியர்கள் எல்லோரும் சேர்ந்து இழுத்துக் கொண்டு வந்து நிறுத்தி இருக்கக்கூடிய இந்த தேர்தான், அகழாராய்வுகள். இந்த சைட் மியூசியம் உலக அளவில் போற்றக்கூடிய ஒரு அருங்காட்சியமாக உருவாக வேண்டும்” என்றும் கேட்டு கொண்டார்.
இந்நிகழ்வில், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், இந்திய தொல்லியல் துறை இயக்குநர் கிஷோர் குமார் பாசா, இணை இயக்குநர் எஸ்.கே.மஞ்சுல், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், திருச்சி மண்டல தொல்லியல்துறை இயக்குநர் அருண்ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மும்முரமாக நடைபெற்று வரும் மகளிர் உரிமைத் தொகைக்கான பணிகள்.. 2ம் கட்ட விண்ணப்பதிவு இன்று முதல் தொடக்கம்..