ETV Bharat / state

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக்கோரி மனு! - thoothukudi sterlite

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் எனக் கோரி தொழில்துறை விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

petition
petition
author img

By

Published : Aug 7, 2020, 4:55 AM IST

தூத்துக்குடி தொழில்துறை விற்பனையாளர்கள் சங்கம் சார்பில் அதன் நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியை சந்தித்து, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தனர்.

இதைத்தொடர்ந்து அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாங்கள் தூத்துக்குடியில் பல வருடங்களாக வசித்து வருகிறோம். இங்கு உள்ள பல தொழிற்சாலைகளுக்கு தேவையான உதிரிபாகங்கள், தளவாட பொருட்களை விற்பனை உற்பத்தி செய்து வருகிறோம்.

பல ஆயிரம் பேர் தூத்துக்குடியில் உள்ள தொழிற்சாலைகளை நம்பி வாழ்ந்து வருகிறோம். சமீப காலங்களாக இங்குள்ள அனல் மின் நிலையங்கள், தனியார் நிறுவனங்கள் சரிவர செயல்படாததால் நஷ்டம் ஏற்பட்டு மூடும் நிலைக்கு சென்றுள்ளன. நிலையாக செயல்பட்டுக் கொண்டிருந்த ஸ்டெர்லைட் ஆலையும் மூடப்பட்டுவிட்டது. இதன் தொடர்ச்சியான பாதிப்புகளில் இருந்து மீள முடியாமல் வாழ்வாதாரம் இழந்து நாங்கள் தவித்து வருகிறோம்.

மேலும் கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் தொழில் வளர்ச்சி முடங்கிப் போயுள்ளது. வேலையின்மை மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் போன்ற நிறுவனங்கள் செயல்பட்டால் மிகப்பெரிய அளவில் பொருளாதார வளர்ச்சிக்கு கைகொடுக்கும். நல்ல முறையில் இயங்கி வந்த இந்த ஆலை தமிழ் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது. ஸ்டெர்லைட்டை மூடியதனால் மூன்றாயிரம் தொழில்துறை விற்பனையாளர்கள் மட்டுமின்றி பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளோம்.

ஆலையை மூடியதனால் தூத்துக்குடியின் தொழிற்வளர்ச்சி பல ஆண்டு காலம் பின்நோக்கி சென்றுள்ளது. இதனால் வேறு எந்த தொழில்நிறுவனங்களும் தூத்துக்குடிக்கு வரமாட்டார்கள். எனவே தூத்துக்குடியை வளர்ச்சிப்பாதையில் எடுத்துச்செல்ல ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்கவேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி ஆயிரத்து 200-க்கும் மேற்பட்டோர் அளித்த விருப்ப கோரிக்கை மனுவை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மூலமாக தமிழ்நாடு முதலமைச்சரிடம் அளிக்க உள்ளோம்"‌ என்றனர்.

இதையும் படிங்க: தூத்துக்குடி முதல் பெங்களூரு வரையிலான விமான சேவை - நான்கு மாதங்களுக்குப் பிறகு தொடக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.