ETV Bharat / state

மண பந்தத்தை தாண்டிய காதலனின் நண்பனுடனான உறவால் அரங்கேறிய பயங்கரம்: மூவர் கைது, 2 பேர் சரண்! - thoothukudi illegal affairs 3 arrested

தூத்துக்குடி: ஓட்டப்பிடாரம் அருகே மண பந்தத்தை தாண்டிய காதலனின் நண்பனுடன் ஏற்பட்ட உறவால் கார் ஓட்டுநர் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இரண்டு பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

murdered
author img

By

Published : Nov 9, 2019, 7:19 PM IST

Updated : Nov 9, 2019, 10:38 PM IST

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஆச்சிமடத்தை சேர்ந்தவர் விக்ரமாதித்திய ராஜபாண்டி (51). கார் ஓட்டுநரான இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.

மாற்றான் மனைவியுடன் குடித்தனம்

இவர் மீது ஏற்கனவே சென்னை, தஞ்சாவூர், திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் கார் திருட்டு வழக்குகள் உள்ளன. இவருக்கும் சங்கரன்கோவில் வன்னிக்கோனேந்தலைச் சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மனைவி சித்ராவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமண பந்தத்தைத் தாண்டிய உறவு ஏற்பட்டது.

இதையடுத்து விக்ரமாதித்திய ராஜபாண்டி புதியம்புத்தூரில் தனது நண்பர்களான ராமர், சக்திவேல் ஆகியோர் உதவியுடன் வாடகைக்கு வீடு எடுத்து சித்ராவை தங்கவைத்துள்ளார். அங்கு இருவரும் குடும்பம் நடத்திவந்ததாகக் கூறப்படுகிறது.

2ஆவது காதலனுடன் தீட்டிய சதி அரங்கேற்றம்

இதில் ராமர் கார் ஓட்டுநர் என்பதால் கார் வாங்குவது, விற்பது தொடர்பாக விக்ரமாதித்திய ராஜபாண்டி வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றதில் அவருக்கும் சித்ராவிற்கும் இடையே காதல் தீ பற்றிக் கொண்டது. இது குறித்து தெரியவரவே ராஜபாண்டி சித்ராவை கண்டித்துள்ளார்.

இதையடுத்து ராஜபாண்டியைக் கொலை செய்ய ராமர்-சித்ரா இணைந்து சதித்திட்டம் தீட்டி கடந்த அக்டோபர் 15ஆம் தேதி அவருக்கு மது வாங்கி கொடுத்துள்ளனர். அதன் பின்னர் அவரை வெட்டிக் கொலை செய்து தலையை புதியம்புத்தூரில் உள்ள கிணற்றிலும் உடலை தட்டப்பாறையிலுள்ள ஒரு கல்குவாரியில் தேங்கியுள்ள நீர் குட்டையிலும் வீசியுள்ளனர்.

காவல் துறையினர் நடவடிக்கை

இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தென்காசியில் நடந்த வாகன சோதனையின்போது காவல் துறையினரிடம் ராமர் சிக்கியுள்ளார். அவரிடம் விசாரிக்க வேண்டிய விதத்தில் விசாரித்ததில் நடந்தவற்றை ஒப்புக்கொண்டார். இதையடுத்து ராமர், சித்ராவுடன், இதற்கு உடந்தையாக இருந்த ராமர் மனைவி லெட்சுமி ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

மண உறவைத் தாண்டிய காதல் - கொல்லப்பட்டவரின் தலை, உடல் மீட்பு

இது குறித்து தென்காசி காவல் துறையினர் அளித்த தகவலின் பேரில் ராமர், சித்ராவை புதியம்புத்தூர் அழைத்து வந்து விசாரணை செய்தனர். இதில் உடல், தலை கிடக்கும் இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த வழக்கில் கொலை செய்யப்பட்ட ராஜபாண்டியின் உடலை காரில் எடுத்துச் சென்ற மேலும் இருவரை காவல் துறையினர் தேடிவந்த நிலையில் அதை செய்த முத்துக்கனி, சக்திவேல் ஆகிய இருவர் கோவில்பட்டி நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளனர்.

மேலும் படிக்க: தகாத உறவில் இருந்த தாய், மகன் - எதிர்த்த தந்தையை எரித்துக்கொன்ற கொடூரம்!

Intro:ஓட்டப்பிடாரம் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கார் டிரைவர் வெட்டிப்படுகொலை - தலை, உடலை தனித்தனியாக வீசிச்சென்ற கொடூரம்
Body:

தூத்துக்குடி

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஆச்சிமடத்தை சேர்ந்தவர் விக்ரமாதித்திய ராஜபாண்டி (51).கார் புரோக்கரான இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் மீது ஏற்கனவே சென்னை, தஞ்சாவூர் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு காவல்நிலையங்களில் கார் திருட்டு வழக்குகள் உள்ளது. இவருக்கும் சங்கரன்கோவில் வன்னிக்கோனேந்தலை சேர்ந்த ரவிச்சந்திரன் என்பவரின் மனைவி சித்ராவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சித்ராவை விக்ரமாதித்திய ராஜபாண்டி புதியம்புத்தூரில் தனது நண்பர்களான ராமர், சக்திவேல் ஆகியோர் உதவியுடன் வாடகைக்கு வீடு எடுத்து தங்க வைத்துள்ளார். அங்கு இருவரும் கள்ளத்தனமாக குடும்பம் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதில் ராமர் கார் ஓட்டுனர் என்பதால் கார் வாங்குவது, விற்பது தொடர்பாக விக்ரமாதித்திய ராஜபாண்டி வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றதில் ராமருக்கும், சித்ராவிற்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தெரியவரவே ராஜபாண்டி, சித்ராவை கண்டித்துள்ளார்.
இதையடுத்து ராஜபாண்டியை கொலை செய்ய ராமர் மற்றும் சித்ரா இணைந்து சதிதிட்டம் தீட்டி கடந்த அக்டோபர் 15ம் தேதி விக்ரமாதித்திய ராஜபாண்டிக்கு மது வாங்கி கொடுத்துள்ளனர். அதன் பின்னர் அவரை வெட்டி கொலை செய்து தலையை புதியம்புத்தூரில் உள்ள கிணற்றிலும், உடலை தட்டப்பாறையிலுள்ள ஒரு கல்குவாரியில் தேங்கியுள்ள நீர் குட்டையில் வீசியுள்ளனர்.
இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தென்காசியில் நடந்த வாகனசோதனையின் போது போலீசிடம் ராமர் சிக்கியுள்ளார். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை செய்ததில் மேற்கண்ட விபரங்கள் தெரிய வந்துள்ளது. மேலும் போலிசார் கொலை வழக்கில் ராமர், சித்ரா, ராமர் மனைவி லெட்சுமி ஆகிய மூன்று பேர் கைது செய்தனர். இது குறித்து தென்காசி போலீசார் அளித்த தகவலின் பேரில் ராமர் மற்றும் சித்ராவை புதியம்புத்தூர் அழைத்து வந்து விசாரணை செய்தனர். இதில் உடல் மற்றும் தலை கிடக்கும் இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கில் கொலை செய்யப்பட்ட ராஜபாண்டியின் உடலை காரில் எடுத்து சென்ற மேலும் இருவரை போலீசார் தேடி வந்தநிலையில் முத்துகனி, சக்திவேல் ஆகிய இருவர் கோவில்பட்டி நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளனா்.Conclusion:
Last Updated : Nov 9, 2019, 10:38 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.