தருவைகுளத்தைச் சேர்ந்த அந்தோணி மிக்கேல் கெமில்டன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் கடந்த மாதம் 12ஆம் தேதி 8 மீனவர்கள் தருவைக்குளத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடித் தொழிலுக்குச் சென்றனர்.
மீனவர்கள் கைது
கன்னியாகுமரி கடல் பகுதியில் தென்திசையில் மீன்பிடித்தொழில் செய்துகொண்டிருந்தபோது, அதிவேக நீரோட்டத்தின் காரணமாக எதிர்பாராதவிதமாக படகு மாலத்தீவின் எல்லை அருகே சென்றுவிட்டதாகத் தெரிகிறது.
அச்சமயம் அங்கு ரோந்து வந்த மாலத்தீவு கடற்படையினர் எல்லைத் தாண்டிவந்து மீன்பிடித்ததாக தூத்துக்குடி மீனவர்கள் சென்ற விசைப்படகையும், 8 மீனவர்களையும் கைதுசெய்து மாலத்தீவிற்குக் கொண்டுசென்றனர்.
![தூத்துக்குடி மீனவர்கள்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tut-04-8fisherman-arrest-maldives-photo-script-7204870_01032021210055_0103f_1614612655_1018.jpg)
மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
எனவே மீனவர்களையும், படகையும் மீட்க, மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.