ETV Bharat / state

கோவில்பட்டியில் மருந்தகம், வங்கி ஊழியர் மூவர் உட்பட 26 பேருக்கு கரோனா

தூத்துக்குடி : கோவில்பட்டியில் இ.எஸ்.ஐ. மருந்தகம், வங்கி ஊழியர் மூவர் உள்பட 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

Thoothukudi ESI hospital staff affected covid-19

author img

By

Published : Jul 18, 2020, 10:07 AM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுக்கா அலுவலகம் அருகே உள்ள இ.எஸ்.ஐ. மருந்தக ஊழியர்கள் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூன்று நாட்களுக்கு மருந்தகம் மூடப்பட்டது. இதே போல், எட்டயபுரம் சாலையில் உள்ள எச்டிஎஃப்சி தனியார் வங்கி ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று காரணமாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூன்று நாட்களுக்கு வங்கி மூடப்பட்டது.

இந்நிலையில், ஒரே நாளில் கோவில்பட்டி பகுதியில் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அதிகரித்து வரும் கரோனா வைரஸ் தொற்று காரணமாக கோவில்பட்டி நகராட்சி ஆணையர் ராஜாராம் உத்தரவின்படி, சுகாதாரத் துறை ஆய்வாளர் சுரேஷ் மற்றும் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் விரைந்து சென்று கிருமி நாசினி மருந்து தெளித்தனர்‌.

பின்னர் எச்டிஎஃப்சி பேங்க் இ.எஸ்.ஐ மருந்தகம் மூடப்பட்டது. இதேபோல் கோவில்பட்டி அருகே உள்ள பாண்டமங்கலம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுகளில் 15 நாள் கடைகள் அடைக்க கோவில்பட்டி தாசில்தார் மணிகண்டன் உத்தரவிட்டுள்ளார். எனவே, அப்பகுதியில் முக்கிய சாலைகள் தடுப்பு வேலி அமைத்து தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் ஒரே நாளில் மட்டும் 189 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் ஆயிரத்து 768 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மேலும், ஒரே நாளில் மட்டும் 127 பேர் நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.