ETV Bharat / state

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது - காவல்துறை அதிகாரி தகவல்! - anti drug awareness

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா விற்பனை கட்டுப்படுத்தப்பட்டு பெருமளவு குறைந்துள்ளதாக மாவட்ட காவல்கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி
Thoothukudi
author img

By

Published : Aug 11, 2023, 4:57 PM IST

தூத்துக்குடியில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில் ஆயுதப்படை மைதானம் முன்பு போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு இருசக்கர வாகன பேரணி இன்று (ஆகஸ்ட் 11) நடைபெற்றது. இப்பேரணியை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

இப்பேரணியானது மாநகரின் முக்கிய வீதி வழியாக சென்று தூத்துக்குடி காமராஜ் கல்லூரி முன்பு நிறைவடைந்தது. இப்பேரணியில் தன்னார்வலர்கள், போக்குவரத்து காவல்துறையினர், பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும், போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்று பொதுமக்களிடம் போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

முன்னதாக, போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் ஆகியோர் அப்பகுதியில் வந்த இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனம், லாரி, போருந்துகளில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்ப்படுத்தினர். இதில், மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், சார் ஆட்சியர் கௌரவ் குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: அரசு மருத்துவர்களின் கோரிக்கைக்கு 13 வயதாகிறது.. அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

பின்னர், இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், ”தமிழக முதல்வரின் உத்தரவின்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் போதை பொருள் ஒழிப்பு குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருவதாகவும், தூத்துக்குடி மாவட்டத்தை போதை பொருள் இல்லாத மாவட்டமாக உருவாக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளிலும் போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வுகள் முகாம்கள் நடத்தப்பட்டு விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு விபத்துகளில் உயிரிழந்தவரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து உள்ளதாகவும், குற்றங்களின் எண்ணிக்கையும் இதே போல குறைந்து உள்ளதாக அவர் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் 3,300 விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு 96 ஆயிரம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உறுதிமொழி எடுக்க வைத்துள்ளதாக கூறினார்.

மேலும், இந்த ஆண்டு இதுவரை 105 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தொடர்ந்து அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இதையும் படிங்க: பராமரிப்பின்றி கிடக்கும் சாலை மின்விளக்குகள் - விபத்துக்கு வழிவகுக்கிறதா நகராட்சி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.