தூத்துக்குடி: 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் 28.07.2022 முதல் 10.08.2022 வரை மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இதனையடுத்து தூத்துக்குடி மாவட்டத்தில் செஸ் விளையாட்டு போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணி மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் செஸ் கூட்டமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு செஸ் விளையாட்டு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் இன்று தொடங்கி வைத்தார். இதில் செஸ் அசோசியேசன் நிர்வாகிகள், வட்டாட்சியர் செல்வக்குமார் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர், செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்தும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளிடம் செஸ் விளையாட்டு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக கூறினார். மாவட்டத்தில் பல்வேறு துறைகள் இணைந்து இதுபோன்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி - மோடிக்கு அழைப்பு விடுத்த ஸ்டாலின்!!