ETV Bharat / state

ஏரல் வட்டாட்சியர் அதிரடி மாற்றம்! - தென் மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு

Eral Tahsildar Changed: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டாட்சியராக பணிபுரிந்து வரும் கைலாஷ் குமாரசாமி என்பவரை, மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 22, 2023, 8:02 PM IST

தூத்துக்குடி: தென் தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெய்த அதி கனமழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, கடுமையாக பாதிக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். மேலும், அரசுக்கு பல்வேறு சேதங்கள் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பல்வேறு பகுதிகள் பாதிக்கப்பட்டது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியிலுள்ள தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாலம் அடித்துச் செல்லப்பட்டது. மேலும், ஏரல் பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் வணிகர்களுக்கு 100 கோடி ரூபாய் அளவிற்கு பொருள் இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வட்டாட்சியராக பணிபுரிந்து வந்த கைலாஷ் குமாரசாமி என்பவரை, மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் கைலாஷ் குமாரசாமிக்குப் பதிலாக, திருச்செந்தூர் ஆதி திராவிடர் நலத்துறை வட்டாட்சியராக பணிபுரிந்து வந்த கோபால கிருஷ்ணன் என்பவரை பணி நியமனம் செய்து, மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: தென் மாவட்ட மக்கள் வெள்ளத்தில் தத்தளித்த போது மு.க.ஸ்டாலின் டெல்லியில் என்ன செய்தார்? - நிர்மலா சீதாராமன் சரமாரி கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.