ETV Bharat / state

சட்டவிரோதமாக இலங்கைக்கு செல்ல முயன்ற வழக்கு: ஜோனாதன் தோர்னுக்கு 2 ஆண்டுகள் சிறை

சட்டவிரோதமாக இலங்கைக்கு செல்ல முயன்ற வழக்கில் ஜோனாதன் தோர்னுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நபருக்கு- 2 ஆண்டு சிறை தண்டனை- தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

author img

By

Published : Dec 30, 2022, 10:28 PM IST

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நபருக்கு- 2 ஆண்டு சிறை தண்டனை- தூத்துக்குடி நீதிமன்றம் தீர்ப்பு

தூத்துக்குடி: இங்கிலாந்து நாட்டில் லிட்டில் ஹாம்டன் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபல போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவன் ஜோனாதன் தோர்ன். இவர் மீது ஏற்கனவே மும்பையில் போதை மருந்து தொழிற்சாலை நடத்தியதாக மத்திய வருவாய் புலனாய்வு துறையினர் ரூ.40 கோடி மதிப்பிலான கேட்டமைன் உள்ளிட்ட போதை மருந்து பொருட்களுடன் கடந்த 2020 ஆம் ஆண்டு கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்த ஜோனாதன் தோர்ன் தூத்துக்குடிக்கு வந்து உரிய ஆவணம் எதுவும் இன்றி படகுமூலம் இலங்கைக்கு கடந்த 10.6.2021-ம் ஆண்டு தப்பிக்க முயற்சித்தது தெரியவந்தது.

இந்த தகவல் கியூ பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜய அனிதாவிற்கு கிடைத்த நிலையில், அவரின் தலைமையிலான கியூ பிரிவு போலீசார் இலங்கைக்கு தப்ப முயன்ற ஜோனதனை உடனடியாக கைது செய்து தூத்துக்குடி நடுவர் நீதிமன்ற எண் ஒன்றில் ஆஜர்படுத்தினர்.

இது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி குபேரசுந்தர் உரிய ஆவணமின்றி இலங்கைக்கு படகுமூலம் தப்ப முயன்ற பிரபல போதை கடத்தல் கும்பல் தலைவன் ஜோனாதன் தோர்னுக்கு இரண்டு ஆண்டுகள் சிறை
தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க:முன்னாள் எம்.பி. மரணத்தில் திடீர் ட்விஸ்ட்.. திட்டம்தீட்டி கொலை செய்தது அம்பலம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.