ETV Bharat / state

கழிவறை கட்ட செங்கல் வேண்டாம்... வெறும் காலிபாட்டில் போதும்! - மறுசுழற்சியில் அசத்தும் தூத்துக்குடி மாநகராட்சி - empty water bottle toilet building

தூத்துக்குடி: கரோனா முகாம்களில் இருந்து சேகரிக்கப்பட்ட காலி தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கழிவறை கட்டும் பணியை தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக தூத்துக்குடி மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. செங்கலால் கட்டும் செலவை விட இதற்கான செலவு குறைவாக உள்ளதாக மாநகராட்சி அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

spl story
spl story
author img

By

Published : Nov 9, 2020, 9:33 AM IST

Updated : Nov 19, 2020, 10:43 AM IST

தமிழ்நாடு முழுவதும் நாள்தோறும் டன் கணக்கில் வெளியேற்றப்படும் குப்பைக் கழிவுகள் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமங்களில் அந்தந்த குப்பை சேமிப்பு கிடங்குகளில் கொட்டப்படுவதால், நாளடைவில் அவற்றிலிருந்து நோய் பரவும் அபாயம் ஏற்படுவதுடன், துர்நாற்றம் வீசும் நிலை இருந்துவருகிறது. இவ்வாறு டன் கணக்கில் சேமிக்கப்படும் குப்பைகளைக் கொண்டு பசுந்தீவனங்கள் தயாரிக்கவும், மறுசுழற்சி செய்யும் வகையில் பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தவும் தமிழ்நாடு அரசு ஊக்குவித்து வருகிறது. திடக்கழிவு மேலாண்மை போன்ற சமூக திட்டங்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக, பயன்படுத்தப்பட்டு வீணாக தூக்கி எறியப்பட்ட காலி தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு கழிவறை கட்டும் பணியை தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக தூத்துக்குடி மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.

தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட பெருமாள்புரம் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான திடக்கழிவு மேலாண்மை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு நாள்தோறும் சேமிக்கப்படும் குப்பைகளில் உள்ள காய்கறி கழிவுகள், தண்ணீர் பாட்டில்கள் ஆகியவை சேர்த்து வைக்கப்பட்டு மறுஆக்கம் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. பயன்படுத்தப்பட்ட பிறகு தூக்கி எறியப்பட்ட தண்ணீர் பாட்டில்களை சுகாதாரப் பணியாளர்கள் மூலம் சேமிக்கப்பட்டு, பெருமாள்புரம் திடக்கழிவு மேலாண்மை மையத்திற்கு கொண்டு வரப்பட்டது.

ஒரு சோதனை முயற்சியாக காலி தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு கழிவறை கட்டும் பணியினை மேற்கொள்ள மாநகராட்சி ஆணையாளர் ஜெயசீலன் முடிவு செய்தார். இதற்கான திட்ட வரையறைகள் வகுக்கப்பட்டு, ஒப்புதலுக்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு அனுப்பப்பட்டது. மாநகராட்சியின் புது முயற்சிக்கு அரசு ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து திடக்கழிவு வளாகத்திற்குள்ளேயே செங்கல்லுக்கு பதிலாக காலி தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு கழிவறை கட்டும் பணி தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

காலி தண்ணீர் பாட்டில்களில் கடல் மண் அடைக்கப்பட்டு பாட்டில்களின் மூடி பசையால் சீல் வைக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து செங்கல்லுக்கு பதிலாக மண் நிரப்பப்பட்ட தண்ணீர் பாட்டில்கள் சிமெண்ட் கலவைகளுக்கு மத்தியில் அடுக்கப்பட்டு சுவர் எழுப்பப்பட்டுள்ளது. சுமார் 1500 காலி தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு, 6 அடி அகலம் 8 அடி நீளம் இருக்கும் வகையில் இந்த கழிவறை அமைக்கப்படுகிறது.

சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள்
சேகரிக்கப்படும் குப்பை கழிவுகள்

கழிவறை கட்டும் பணிகள் அடுத்த இரண்டு வாரத்திற்குள் முழுவதுமாக நிறைவடைந்து பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என மாநகராட்சி நல அலுவலர் அருண் தெரிவித்துள்ளார்.

கழிவறை பணியை பார்வையிடும் மாநகராட்சி அலுவலர்கள்

இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா ஊரடங்கு காலத்தில் கரோனா சிகிச்சை மையங்களுக்கும், காய்ச்சல் தனிமை வார்டுகளுக்கும் தன்னார்வ நிறுவனங்கள் மூலம் தண்ணீர் பாட்டில்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு வழங்கப்பட்ட தண்ணீர் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டு பெருமளவு தூக்கி வீசப்பட்டது. கரோனா முகாம்களில் இருந்து சேகரிக்கப்பட்ட இந்த தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கழிவறை கட்ட முடிவு செய்தோம். சேகரிக்கப்பட்ட காலி தண்ணீர் பாட்டில்கள் முழுவதும் கிருமிநாசினி கொண்டு தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.

பொதுவாக செங்கற்கல்லால் கழிவறை கட்டும் பொழுது அதற்கு ஆகும் செலவு குறைந்தபட்சம் மூன்று லட்சம் வரை ஆகும். ஆனால் காலி தண்ணீர் பாட்டில்களைக் கொண்டு கழிவறை கட்டுவதன் மூலமாக மாநகராட்சிக்கு செலவு பாதியாக குறைகிறது. அதுமட்டுமின்றி திட்டமிட்ட காலத்திற்குள் பணியை விரைந்து முடிக்க முடிகிறது.

பாட்டிலினுள் கடல் மண் அடைக்கப்படுவதால் செங்கல் போன்று உறுதித்தன்மை கிடைக்கிறது. இந்த முதல் முயற்சி வெற்றி அடைந்தால் இதை முன்மாதிரியாகக் கொண்டு மாநகராட்சியின் பல இடங்களிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கழிவறைகள் மற்றும் மக்களுக்கு பயனுள்ள கட்டடங்களை கட்டித்தர முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று கூறினார்.

கழிவறை கட்ட செங்கல் வேண்டாம்... வெறும் காலிபாட்டில் போதும்!

இதையும் படிங்க:எங்க ஊருக்கு கழிவறை வசதியை ஏற்படுத்தித் தர முடியுமா?: மாணவியின் கோரிக்கைக்கு செவிமடுத்த தொண்டு நிறுவனம்!

Last Updated : Nov 19, 2020, 10:43 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.