ETV Bharat / state

‘மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்’ - சந்தீப் நந்தூரி - sandeep nanduri

தூத்துக்குடி: கனமழைக்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

thoothukudi
author img

By

Published : Oct 30, 2019, 5:42 AM IST

Updated : Oct 30, 2019, 8:00 AM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டின் ஏழாவது பொருளாதாரக் கணக்கெடுப்பை மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தொடங்கிவைத்தார். அதற்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”தென் தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வந்துள்ள தகவலைத் தொடர்ந்து மாவட்டத்தின் அனைத்து முக்கிய இடங்களிலும் பொதுமக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கை முழுமையாக எடுக்கப்பட்டுள்ளது. ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் மக்களை மீட்டெடுப்பதற்காக 87 மீட்கும் படை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு அனைத்தும் தயாராக உள்ளதா என்பது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன” என தெரிவித்தார்.

மேலும் அவசர காலத்தில் உதவிடுவதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் 1077 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு மக்கள் தகவல் தெரிவிக்கலாம் எனவும் ஒவ்வொரு துறை சார்பிலும் தேவையான உபகரணங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளது என்றும் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி

தொடர்ந்து பேசிய அவர், மழையோ வெள்ளமோ வந்தால் அதனை எதிர்கொள்ளும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக தெரிவித்தார்.

இதையும் படிங்க: மழைக்கால நிவாரணத் தொகையை உயர்த்திக் கேட்கும் மீனவர்கள்

Intro:கனமழைக்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது - மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி பேட்டி
Body:

தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டின் ஏழாவது பொருளாதார கணக்கெடுப்பு இன்று துவங்கியது. மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி பொருளாதார கணக்கெடுப்பை தொடங்கி வைத்தார்.
நாட்டிலுள்ள மக்களின் சமூக பொருளாதார நிலையை அறிந்து கொண்டு திட்டமிடுவதற்கு தேவையான விபரங்களை பெறுவதற்காக மத்திய புள்ளி விவரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சக வழிகாட்டுதலின்படி 1977 ஆம் ஆண்டு முதல் பொருளாதார கணக்ககெடுப்பு நடத்தப்படுகின்றன. இதுவரை ஆறு முறை இந்த கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தற்போது 7 வது முறையாக நகர்புறம் மற்றும் கிராமங்களில்  பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடும் அமைப்பு மற்றும் அமைப்பு சாரா நிறுவனங்கள்,அரசு,தனியார் நிறுவனங்கள்,வீடுகளில் செயல்படும் நிறுவனங்கள், வளாகம் மற்றும் வளாகம் இல்லாமல் செயல்படும் நிறுவனங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்படுகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் 600 பேர் பல்வேறு பகுதிகளில் இந்த பொருளாதார கணக்கெடுப்பை மேற்கொள்ளுகின்றனர். இந்த கணக்கெடுப்பின் போது தொழில் விவரம் உரிமையாளர்,வயது,பாலினம்,மதம்,கமூகபிரிவு,பணியாளர்களின் எண்ணிக்கை,நிதி ஆதாரம்,முதலீடு போன்ற 14 வகையான விபரங்கள் சேகரிக்கப்பட்டு உடனடியாக மொபைல் ஆப் மூலம்  பதிவேற்றம் செய்யப்படுகின்றன. பொருளாதார கணக்கெடுப்புகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், தென் தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்கள் கனமழைக்கு  வாய்ப்புள்ளதாக வந்துள்ள தகவலை தொடர்ந்து அனைத்து முக்கிய இடங்களிலும் பொது மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கை முழுமையாக எடுக்கப்பட்டுள்ளன. ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் மக்களை மீட்டெடுப்பதற்காக 87 மீட்கும் படை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு அனைத்தும் தயாராக உள்ளதாக என்பது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன. அவசர காலத்தில் உதவிடுவதற்காக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. 1077 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு மக்கள் தகவல் தெரிவிக்கலாம். ஒவ்வொரு துறை சார்பிலும் தேவையான உபகரணங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. மழையோ வெள்ளமோ வந்தாலும் அதனை எதிர்கொள்ளும் வகையில் மாவட்டத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன என்றார். தூத்துக்குடி அருகே உள்ள  தருவைகுளம் மீன்பிடிக்க சென்ற  மீனவர்களில் திரும்பி வராத 100 மீனவர்கள் லட்சத்தீவு, கன்னியாகுமரி, பாம்பன்,  உள்ளிட்ட பகுதிகளில் பாதுக்காப்பாக தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும் கடலுக்கு சென்றுள்ளவர்கள் அந்நதந்ந பகுதிகளில் தஞ்சம் அடைய கூறியுள்ளோம். தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து மீனவர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்றார்.Conclusion:
Last Updated : Oct 30, 2019, 8:00 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.