தூத்துக்குடி: மேலஅலங்காரத்தட்டு கிராமத்தில் தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியனின் 12வது நினைவு தினம், வருகிற 10ஆம் தேதி அன்று அனுசரிக்கப்படுவதை முன்னிட்டு, தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை, டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தூத்துக்குடி மாவட்டம், தூத்துக்குடி வட்டம், மேலஅலங்காரத்தட்டு கிராமத்தில் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பின் நிறுவனர் பசுபதி பாண்டியனின் 12வது நினைவு தினம் 10.01.2024 அன்று அனுசரிக்கப்படுகிறது.
அதனை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடை மற்றும் பார்) விதிகள் 2003 விதி 12 துணை விதி (1)-இன்படி, 75 டாஸ்மாக் மதுபானக் கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த மதுபானக் கூடங்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும். எனவே, இந்த தினத்தில் மதுபான விற்பனை, மதுபானத்தை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் போன்ற செயல்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது, தமிழ்நாடு மதுவிலக்கு அமலாக்கச் சட்டத்தின் கீழ் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ரேஷன் ஊழல் வழக்கு; திரிணாமூல் காங்கிரஸ் மூத்த தலைவர் சங்கர் ஆத்யா கைது!