தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் சுமார் 200க்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இப்பகுதியின் அருகே பக்கிள் கழிவு நீர் கால்வாய் உள்ளது. இந்தக் கால்வாய் மூலம் கழிவுநீர் கடலில் கலக்கப்படுகின்றது.
கால்வாயிலிருந்து அதிகளவில் நெகிழிப் பொருள்கள் கடலில் கலந்தது. இதையடுத்து கால்வாயிலிருந்து நெகிழிப் பொருள்களை பிரித்தெடுக்க வலையை கட்ட சொல்லி முன்னாள் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். தற்போது அந்த வலை கிழிந்து காணாமல் போனது.
இதனால் கால்வாயும், கடலும் சங்கமிக்கும் இடத்தில் அதிகளவில் சகதி போன்ற கழிவுகள் சேர்ந்துள்ளன. இப்பகுதியிலிருந்துதான் படகுகள் கடலுக்குள் சென்று வருகின்றனர். இப்போது இந்த கழிவால் படகுகளை எடுக்க முடியாமல் மீனவர்கள் தவிக்கின்றனர்.
ஆகவே மாவட்ட நிர்வாகம் பக்கிள் கழிவுநீர் கால்வாயில் தேங்கியுள்ளள கழிவுகளை சுத்தப்படுத்தி தரவேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: குடிநீரில் கழிவுநீர் கலப்பதாகப் பொதுமக்கள் புகார்