தூத்துக்குடி மாநகராட்சி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1,100 கோடியில் பல்வேறு திட்டப் பணிகள் நடைபெற்ற வருகின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு வசதிகளுடன் புதுப்பொலிவு பெற்றுள்ள தூத்துக்குடி மாநகரத்தில், மாநகருக்கு அழகு சேர்க்கும் வகையில் தூத்துக்குடி செல்ஃபி பாயிண்ட் உள்ளது.
மாநகரில் உள்ள முத்துநகர் கடற்கரை, எம்ஜிஆர் பூங்கா, ரோச் பூங்கா, பண்டு கரை சாலைகளில் நீரூற்று, பூங்காக்கள் அழகு படுத்தப்பட்டு உள்ளன. இங்கு பொதுமக்கள், மாணவ - மாணவிகள், சிறியவர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்ஃபி பாயிண்டில் முகம் சுழிக்கும் வகையில் மாணவர்கள் தெம்மாடிக் காத்து ரீல்ஸ் செய்தனர். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் போலீசார் அவர்களை கண்டித்து அறிவுரை வழங்கியதால், ரீல்ஸ் செய்த மாணவர்கள் மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: Girls Hostel தெம்மாடிக் காத்து - எங்கிருந்து வந்தது ட்ரெண்டிங் ரீல்ஸ்