தூத்துக்குடி துறைமுக தங்குதளத்தில் இருந்து கடல் ரோந்து செல்லும் இந்திய கடலோர காவல் படைக்குச் சொந்தமான கப்பல் 'அபினவ்'. மன்னார் வளைகுடா கடற்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது.
அப்போது நடுக்கடலில் 30 நாட்டிக்கல் மைல் தொலைவில் சந்தேகத்திற்கிடமான முறையில் பதிவு எண் இல்லாமல் சென்ற இந்திய மீன்பிடி படகு ஒன்றை, கடலோர காவல் படையினர் மடக்கிப் பிடித்து விசாரித்தனர். அதில், அந்தப் படகு தனுஷ்கோடி பகுதியிலிருந்து சட்டவிரோதமாக ஒரு டன் எடையுள்ள தடைசெய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தக் கடல் அட்டைகள் சர்வதேச சந்தையில் சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ளவை எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அக்னி தீர்த்தக் கடலில் ஜலயோகா செய்து அசத்திய இருவர்!