ETV Bharat / state

'ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க அனுமதியுங்க... இல்லையென்றால் நாட்டை விட்டு வெளியேறுகிறோம்' - விசைப்படகு மீனவர்களுக்கு ஆழ்கடலில் மீன்பிடிக்க அனுமதி வேண்டும்

தூத்துக்குடி: விசைப்படகு மீனவர்களுக்கு ஆழ்கடலில் தங்கி, மீன்பிடிக்க அனுமதி தரவேண்டும் என தூத்துக்குடி மீன்வளத்துறை இணை இயக்குநரிடம் மீனவர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

protets
protets
author img

By

Published : Mar 5, 2020, 9:07 PM IST

தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாகக் கொண்டு ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் விசைப்படகு மீனவர்கள் இன்று திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின்போது உதவி மீன்வளத் துறை இயக்குநர் அலுவலகம், இணை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்ட முழக்கங்களை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து, மீன்வளத்துறை இணை இயக்குநர் சந்திராவைச் சந்தித்து விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.

பின்னர், ஒருங்கிணைந்த அனைத்து விசைப்படகு உரிமையாளர்கள் கூட்டமைப்பு துணைச்செயலாளர் ஜான் போஸ்கோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், "தூத்துக்குடி துறைமுகத்தை தங்கு தளமாகக் கொண்டு 260க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஆழ்கடலில் தங்கி மீன்பிடித் தொழில் செய்ய மீன்வளத்துறை அனுமதிப்பதில்லை. ஆனால், தமிழ்நாட்டின் பிற கடற்கரை மாவட்டங்களில் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியரின் முயற்சியில், மீனவர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு ஆழ்கடலில் தங்கி மீன் பிடித் தொழில் செய்து வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே தூத்துக்குடியிலும் ஒருநாள் விட்டு ஒருநாள் விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலில் தங்கி மீன்பிடிக்க மாவட்ட நிர்வாகமும், மீன்வளத் துறையும் அனுமதி அளிக்க வேண்டும்" என வலியுறுத்தினார்.

அரசிடம் கோரிக்கை வைக்கும் மீனவர்கள்

மேலும் அவர், 'தங்களது கோரிக்கைகளை ஏற்க மறுத்தால் அண்டை நாடுகளிலிருந்து வந்து தஞ்சம் புகுந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாது என்று கூறியது போல, எங்களுக்கும் குடியுரிமையை ரத்து செய்து இந்த நாட்டை விட்டு வெளியேற்றினாலும் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்ளத் தயாராக உள்ளோம்' என்றார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டைப் பயமுறுத்தும் கொரோனா - நாகை அரசு தலைமை மருத்துவமனையில் தனி வார்டு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.