தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன்கொண்ட 5 பிரிவுகள் மூலம் ஆயிரத்து 50 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி அனல்மின் நிலையம் அமைக்கப்பட்டு சுமார் 35 ஆண்டு காலம் ஆகும். இந்நிலையில் 5 பிரிவுகளில் அவ்வப்போது கொதிகலன் பழுது காரணமாக மின் உற்பத்தி பாதிக்கப்படும் நிலையுள்ளது.
இதனை தொடர்ந்து பழுது நீக்கப்பட்டு மீண்டும் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் இரண்டாவது மற்றும் ஐந்தாவது பிரிவுகளில் கொதிகலன் பழுது காரணமாக 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கொதிகலனை பழுதுபார்க்கும் பணியில் அனல்மின் நிலைய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அனல்மின் நிலைய அலுவலரிடம் கேட்டபோது, இன்று மாலைக்குள் கொதிகலன் பழுது நீக்கப்பட்டு மின் உற்பத்தி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.