தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், தீபாவளிக்கு வெளியாக உள்ள பிகில் திரைப்படத்தின் ரசிகர்கள் காட்சிக்கு அதிக கட்டணம் வசூல் செய்யப்படுவது குறித்து கேட்டதற்கு, தீபாவளிக்கு திரையரங்குகளில் எந்த திரைபடத்துக்கும் சிறப்பு காட்சிகளுக்கு அரசு அனுமதி வழங்கவில்லை என்றும், அதை மீறி சிறப்பு காட்சிகள் திரையிடுவது மற்றும் அதற்கு அதிக கட்டணம் வசூல் செய்தால் அரசு பொறுப்பு ஏற்காது.
அதேபோல், அரசு அனுமதி அளிக்காத நேரத்தில், திரையரங்குகளில் காட்சி ஒளிபரப்பு செய்தால் சம்பந்தப்பட்ட திரையரங்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கடம்பூர் ராஜு எச்சரித்தார்.
பிகில் படக் கதைக்கு காப்புரிமை கோரி மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுக உதவி இயக்குநர் செல்வாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
பிகில் கதை தன்னுடையது எனக் கூறி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் செல்வா வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கில், கதைக்கு காப்புரிமை கோரினார். அதை நீதிமன்றம் ஏற்காததால், வழக்கை திரும்பப் பெற்றார்.
காப்புரிமை தொடர்பாக மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுக கூடாது என அந்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், காப்புரிமை மீறல் தொடர்பாக மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர அனுமதி கேட்டு செல்வா சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார்.
விளம்பரம் மற்றும் பணம் பறிப்பதற்காகவே கடைசி நேரத்தில் செல்வா வழக்கு தொடர்ந்ததாக பட நிறுவனம் மற்றும் அட்லி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பிகில் படக் கதைக்கு காப்புரிமை கோரி மீண்டும் உரிமையியல் நீதிமன்றத்தை அணுக செல்வாவுக்கு நீதிபதி அனுமதி வழங்கினார்.
இதையும் படிங்க:திரைத் துறையில் தடம் பதிக்க வரும் அல்பெரே புரொடெக்ஷன்ஸ்!