ETV Bharat / state

ஸ்ரீவைகுண்டம் அருகே இடையூறாக இருக்கும் கல் குவாரியை இழுத்து மூட வேண்டும் ... ஊர்மக்கள் மனு

author img

By

Published : Aug 29, 2022, 5:02 PM IST

கிராம மக்களுக்கு இடையூறாக இருக்கும் கல்குவாரியை இழுத்து மூட வேண்டும் என்று தூத்துக்குடி, தெற்கு காரசேரி ஊர் மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.

இடையூராக இருக்கும் கல் குவாரியை இழுத்து மூட வேண்டும் - ஊர்மக்கள் மனு

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் தாலுகா பகுதியில் உள்ள தெற்கு காரசேரி பகுதியில் கடந்த 4 ஆண்டுகளாக இயங்கி வரும் கல் குவாரியை இழுத்து மூட வேண்டும் என்று அவ்வூர் பொதுமக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தனர்.

அப்போது தெற்கு காரசேரியினைச் சேர்ந்த சுரேஷ் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் தாலுகா, தெற்கு காரசேரி பகுதியில் சுமார் 100 வீடுகளில் மக்கள் வசித்து வரும் நிலையில், கல்குவாரியால் நீர், நிலம் மற்றும் விவசாயம் பாதிப்பு அடைகிறது.

கல் குவாரிக்கு தினமும் 800 கனரக வாகனங்கள் வருவதால் பொதுமக்களுக்கு உயிர் பலி ஆகும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயம், கிராம வளர்ச்சி பாதிப்படைகிறது. மேலும், கல்குவாரி உரிமையாளரிடம் சேரகுளம் காவல் துறையினர் கையூட்டு பெற்றுக்கொண்டு, இளைஞர்கள் மீது எதிர்காலம் பாதிப்படையும் வகையில் பொய் வழக்குப் போடுகிறார்கள்.

மேலும், அந்த கல்குவாரியில் தோண்டும் பணி நடைபெற்று கொண்டு இருக்கும்போது நில அதிர்வு ஏற்பட்டு அங்குள்ள வீடுகளிலும், அங்குள்ள பழமை வாய்ந்த சிவன் கோயிலும் விரிசல் ஏற்பட்டு வருகிறது. கடந்த சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டத்தில், ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் முன்னிலையில் கல்வாரி முற்றிலும் தடை செய்ய வேண்டும் என ஊர் மக்களால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஸ்ரீவைகுண்டம் அருகே இடையூறாக இருக்கும் கல் குவாரியை இழுத்து மூட வேண்டும் ... ஊர்மக்கள் மனு

ஆகவே, கல்குவாரியை உடனடியாக மாவட்ட நிர்வாகம் தடை செய்து, கல்குவாரி உரிமையாளர் மற்றும் காவல்துறை மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: இலவசம் என விவசாயிகளுக்கான நலத்திட்டங்களை நிறுத்துவது துரோக செயல்... பி.ஆர்.பாண்டியன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.