ETV Bharat / state

புரட்டாசி சனிக்கிழமை  - பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தர்கள் கூட்டம்!

author img

By

Published : Sep 21, 2019, 5:02 PM IST

இன்று புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையோட்டி தூத்துக்குடி, அரியலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பெருமாள் கோயில்களில் தரிசனத்திற்காக பக்தர்களின் கூட்டம் அலை மோதியது.

பரந்தாமனை தரிசித்த பக்தர்கள்

இன்று புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையோட்டி தமிழ்நாட்டின் பல்வேறு கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றுவருகிறது. இந்நிலையில் தூத்துக்குடியில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வைகுண்டபதி பெருமாள் கோயிலிலும் அரியலூர் மாவட்டம் கல்லங்குறிச்சியில் உள்ள கலியுக வரதராஜ பெருமாள் கோயிலிலும் நடைபெற்ற சிறப்பு தரிசனத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக் கடன்களைச் செலுத்தினர்.

புரட்டாசி முதல் சனிக்கிழமையோட்டி பெருமாள் கோயில்களில் சிறப்பு தரிசனம்

இன்று அதிகாலை 5 மணிக்கே கோயில் நடைதிறக்கப்பட்டு பூஜைகளும் தீபாரதனைகளும் நடைபெற்றன. மேலும் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தி காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படியுங்க:

மணக்குள விநாயகர் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சாமியாடி அலுவர்கள் மீது மண்ணைத் தூவிய மக்கள்!​​​​​​​

Intro:தூத்துக்குடி மாவட்டத்தில் பெருமாள் கோவில்களில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு தொடங்கியது

Body:
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் முழுவதிலும் இன்று புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு வெகுசிறப்பாக தொடங்கியது. இதற்காக அதிகாலையிலேயே கோவில் நடைகள் திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத வைகுண்டபதி பெருமாள் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனையும், அலங்காரம் செய்யப்பட்டது. சுவாமி சத்திய நாராயண பெருமாள் அவதாரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்தர்களின் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு தரிசன அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு பக்தர்கள் தரிசனம் நெறிப்படுத்தப்பட்டது. புரட்டாசி சனிக்கிழமை வழிபாட்டை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இதுபோல டூவிபுரம், துறைமுக நகர், சண்முகபுரம் பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.