ETV Bharat / state

"பிஎம் கிசான் திட்டத்தில் குத்தகை விவசாயிகளை சேர்க்க வேண்டும்" - மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க ஆணை - High Court Of Madurai Bench

பிஎம்-கிசான் திட்டத்தில் குத்தகை விவசாயிகளையும் சேர்க்க வேண்டும்.பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியை ஆண்டிற்கு 6000 என்பதிலிருந்து 12ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிய மனு மீதான விசாரணையில் மத்திய, மாநில விவசாயத்துறை செயலாளர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை (Credit - ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2024, 11:24 AM IST

மதுரை: தஞ்சாவூரைச் சேர்ந்த சுவாமிமலை சுந்தர விமலநாதன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில் "மத்திய அரசின் பிஎம்-கிசான் திட்டம் நாட்டிலுள்ள அனைத்து நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் குடும்பங்களுக்கு வருமான ஆதரவை வழங்கும் நோக்கில், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் மத்திய அரசின் திட்டமான "பிரதான மந்திரி கிசான் சம்மான்" திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த திட்டம் விவசாய நிலத்தின் உரிமையாளர்களாக இருந்து விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளின் குடும்பங்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்டு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் பயிர் பாதுகாப்பு மற்றும் நல்ல விளைச்சலை உறுதி செய்வதற்காக பல்வேறு உதவித் தொகை வழங்கப்படுகிறது.

மேலும் விவசாயிகளுக்கு மத்திய அரசு சார்பில் அவர்கள் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.6000 வரவு வைக்கப்படுகிறது. விதிகளுக்கு உட்பட்டு தகுதி உள்ள நபர்களுக்கு விவசாயிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக ஆன்லைனில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் பணம் வரவு வைக்கப்படுகிறது.

இதையும் படிங்க: மீண்டும் சூடுபிடிக்கும் சின்னத்திரை நடிகை சித்ரா மரண வழக்கு.. லேட்டஸ்ட் ட்விஸ்ட் இதுதான்!

அதேசமயம் இந்த திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் சுமார் 1.2 கோடி குத்தகை விவசாயிகள் , பங்கு பயிர் செய்பவர்களுக்கு விவசாய இடுபொருள் செலவு பலன்கள் வழங்கப்படவில்லை. எனவே மத்திய அரசின் மத்திய அரசின் பிஎம்-கிசான் திட்டத்தில் பயனாளிகளாகக் குத்தகை விவசாயிகளையும் சேர்க்க வேண்டும்.

பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதியை ஆண்டிற்கு 6000 என்பதிலிருந்து 12ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்" என மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது குறித்து மத்திய, மாநில விவசாயதுறை செயலாளர்கள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.