ஐதராபாத்: வங்கதேசம் - இந்தியா அணிகள் இடையிலான 2வது மற்று கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் விராட் கோலியின் தீவிர ரசிகனான 15 வயது சிறுவன் அவரது ஆட்டத்தை காண ஏறத்தாழ 58 கிலோ மீட்டர் தூரத்தை 7 மணி நேரம் சைக்கிளில் பயணித்து போட்டி நடைபெறும் கான்பூர் மைதானத்திற்கு வந்த சம்பவம் ஆச்சரியத்தையும் வியப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
58 கிலோ மீட்டர் சைக்கிள் பயணம்:
உத்தர பிரதேச மாநிலம் உன்னாவ் நகரில் இருந்து 58 கிலோ மீட்டர் சைக்கிளில் பயணித்த அந்த சிறுவன் ஏறத்தாழ 7 மணி நேர பயணித்திற்கு பின்னர் கான்பூர் மைதானத்தை அடைந்துள்ளார். கார்த்திக் என்ற சிறுவன் காலை 4 மணிக்கு இருள் சூழ்ந்த வேளையில் தன் சைக்கிள் பயணத்தை தொடங்கிய நிலையில் 11 மணி அளவில் கான்பூரை அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
10ஆம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவனின் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அருகில் இருந்தவர்கள் தனியாக பயணம் பெற்றோர்கள் எப்படி அனுமதித்தனர் என்று எழுப்பிய கேள்விக்கு, தன்னை விருப்பம் போல் சென்று விராட் கோலி பார்த்து வர பெற்றோர்கள் அனுமதித்தாக அந்த சிறுவன் கூறுகிறார்.
A 15-year-old kid rode 58 kilometers on his bicycle just to watch Virat Kohli bat pic.twitter.com/rigqQBoCHq
— A (@_shortarmjab_) September 27, 2024
நிராசையான ஆசை:
இருப்பினும், அந்த சிறுவனின் ஆசை நிராசையாக மாறியது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் விராட் கோலியின் ஆட்டத்தை எதிர்நோக்கி காத்திருந்த சிறுவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கடந்த 9 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய அணி உள்ளூர் டெஸ்ட் போட்டியில் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதற்கு முன் கடைசியாக 2015ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அப்போதைய இந்திய கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்து இருந்தார். அதன் பின் 9 ஆண்டுகள் கழித்து ரோகித் சர்மா உள்ளூர் டெஸ்ட்டில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆசியவிலேயே அதிக விக்கெட்! அனில் கும்பிளேவை பின்னுக்குத் தள்ளிய அஸ்வின்! - Ashwin Breaks Anil Kumble Record