சென்னை: 96 திரைப்பட புகழ் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி, அரவிந்த்சாமி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட பலர் நடிப்பில் நேற்று (செப்.27) வெளியான திரைப்படம் ‘மெய்யழகன்’. தங்சாவூர் மண் வாசனையுடன் உறவுகளின் முக்கியத்துவத்தை மையமாக கொண்டு மெய்யழகன் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
படத்தில் திரைக்கதை பொறுமையாக நகர்ந்தாலும் கார்த்தி, அரவிந்த்சாமி ஆகியோர் நடிப்பின் மூலம் கட்டி போடுவதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். கார்த்தி, அரவிந்த்சாமியின் நகைச்சுவை காட்சிகள், சீரியஸ் காட்சிகள் ரசிகர்கள் சிறுவயதில் ஊரில் வாழ்ந்த நாட்களை நினைவுப்படுத்துவதாக கூறுகின்றனர். மெய்யழகன் படத்தில் முக்கியமான எமோஷனல் காட்சியில் கமல்ஹாசன் பாடும் ’யாரோ இவன் யாரோ’ பாடல் மேலும் காட்சியை மேம்படுத்துவதாக விமர்சனங்கள் வெளியாகியுள்ளது.
மெய்யழகன் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல வசூலை பெற்றுள்ளது. நேற்று வெளியான முதல் நாளில் பிரபல சினிமா வர்த்தக நிறுவனம் சாக்னில்க் (sacnilk) வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழில் மொழியில் 3 கோடி வசூலும், மொத்தமாக 5 கோடி வரை வசூல் செய்துள்ளது.
இதையும் படிங்க: புதிய அணியுடன் ஐரோப்பிய கார் பந்தயத்தில் களமிறங்கும் அஜித்... வைரலாகும் மாஸ் செல்ஃபி வீடியோ! - Ajithkumar in car racing
இந்த வாரம் ஜூனியர் என்டிஆர் நடித்துள்ள 'தேவரா' வெளியாகியுள்ள நிலையில், மெய்யழகன் திரைப்படம் கமர்ஷியல் சார்ந்த படம் இல்லை என்றாலும் நல்ல வசூலை பெற்று வருவது கார்த்தி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மெய்யழகன் படத்தின் வசூல் வார இறுதியில் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்