ETV Bharat / state

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து.. தொழிலாளர்களின் நிலை? - Sattur Fire Accident

சாத்தூர் அருகே கீழ ஒட்டம்பட்டி கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று காலை பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. மேலும், விபத்து நிகழ்ந்த இடத்தில் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து வருவதால் மீட்புப் பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

வெடி விபத்து காட்சி
வெடி விபத்து காட்சி (Credits- ETV Bharat Tamil Nadu)
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 28, 2024, 12:40 PM IST

விருதுநகர்: சாத்தூர் அருகே கீழ ஒட்டம்பட்டி கிராமத்தில் கந்தசாமி என்பவருக்குச் சொந்தமான ஒரு பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்று (செப்.28) காலையில் பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த வெடி விபத்தானது சாத்தூரைச் சுற்றி சுமார் 15 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு மேல் பயங்கர சத்தத்துடன் வெடித்ததாகவும், அதன் அதிர்வுகள் பல கிலோ மீட்டருக்கு மேல் உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அதுமட்டுமின்றி, விபத்து ஏற்பட்டதில் இருந்து தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக அந்த பட்டாசு ஆலையில் உள்ள பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

வெடி விபத்து ஏற்பட்ட காட்சி (Credits- ETV Bharat Tamil Nadu)

இதையும் படிங்க: சிவகாசி பட்டாசு குடோனில் வெடி விபத்து.. பல லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் சேதம்!

விபத்து ஏற்பட்ட சம்பவ இடத்திற்கு சாத்தூர், சிவகாசி, வெம்பக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தீயணைப்புத் துறை வாகனங்களும், பத்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸூம் பட்டாசு ஆலை நுழைவாயில் முன்பாக தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து பட்டாசு வெடித்துக் கொண்டிருப்பதால் 2 மணி நேரமாகத் தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினர் யாரும் அருகில் செல்ல முடியவில்லை எனவும், முழுமையாகப் பட்டாசுகள் வெடித்து முடித்த பின்னரே ஏதேனும் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்துத் தெரியவரும் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தற்போது இந்த பட்டாசு ஆலையில் சில வடமாநில தொழிலாளர்கள் சிக்கி இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.