ETV Bharat / state

சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த காவலர் பணியிலிருந்து நீக்கம்

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் காவல் நிலைய காவலர் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனையடுத்து காவலர் பணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த காவலர் பணியிடை நீக்கம்

author img

By

Published : Jul 19, 2022, 3:45 PM IST

தூத்துக்குடி: ஏரல் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தவர் சசிகுமார். இவர் முன்னதாக திருச்செந்தூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது கடந்த 10.10.2019 அன்று தனக்கு ஒதுக்கப்பட்ட பணிக்குச் செல்லாமல் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு கோயிலுக்கு காக்கி சீருடையில் சென்றுள்ளார்.

அங்கு இருந்த சிறுமி மற்றும் அவரது காதலர் ஆகிய இருவரையும் புகைப்படம் எடுத்து பெற்றோர்களுக்கும், மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தி விடுவதாக மிரட்டி ரூ 5,000/- கொண்டு வர அறிவுறுத்தி சிறுமியின் காதலனை அனுப்பியுள்ளார். பின்னர் தனிமையில் இருந்த அச்சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அச்சிறுமி அளித்த புகாரின் பேரில் திருச்செந்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, மேற்படி காவலர் சசிகுமார் மீது விசாரணை நடைபெற்று வந்தது.

விசாரணையில் காவலர் மீதான குற்றம் நிரூபணம் ஆனதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து அவரை பணியல் இருந்து நீக்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: காதல் விவகாரம்; இளைஞரை கொலை செய்த நண்பர்கள் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.