ETV Bharat / state

வியாபாரி கடத்திக்கொலை: காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு - தட்டார்மடம் வியாபாரி கடத்திக் கொலை

தூத்துக்குடி: தட்டார்மடம் அருகே வியாபாரி கடத்திக் கொலைசெய்யப்பட்ட விவகாரத்தில் காவல் ஆய்வாளர், அதிமுக பிரமுகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

murder
murder
author img

By

Published : Sep 18, 2020, 7:31 PM IST

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே தட்டார்மடம் பகுதியைச் சேர்ந்த வியாபாரி செல்வன் என்பவர், நேற்றிரவு அடையாளம் தெரியாத நபர்களால் காரில் கடத்திச் செல்லப்பட்டு படுகொலைசெய்யப்பட்டார்.

அந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். படுகொலைசெய்யப்பட்ட செல்வனின் தாயார் எலிசபெத், நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு கொடுத்தார்.

அந்த மனுவில், "எங்களுக்குச் சொந்தமான தோட்டம் படுக்கப்பத்து - காந்திகாந்தி நகர் பிரதான சாலை பக்கம் இருக்கிறது. எங்கள் தோட்டத்தின் அருகில் உள்ள நிலத்தினை எனது கொழுந்தன் சிலுவை தாசன், துரைராஜ் ஆகியோரிடமிருந்து உசரத்து குடியிருப்பைச் சேர்ந்த திருமணவேல் தனது மனைவி லிங்ககனி பெயரில் பத்திரம் செய்து பெற்றுள்ளார்.

அவருடைய நிலத்துடன் எங்களுக்குச் சொந்தமான சுமார் ஒன்றே முக்கால் ஏக்கர் நிலத்தையும் சேர்த்து 2019ஆம் ஆண்டு அடைத்துவிட்டார். இதனால் எங்களுக்குள் பிரச்னை ஏற்பட்டு ஒரு வருடத்திற்கும் மேலாக நிலத்தகராறு இருந்துவருகிறது.

சொத்து பிரச்னையை பகையாக கொண்டு எனது இடத்தினை அபகரிக்கும் நோக்கத்துடன் திருமணவேல் தட்டார்மடம் காவல் நிலைய ஆய்வாளர் துணையுடன் எனது மகன்கள் செல்வன், பங்காரு ராஜன் என்ற ராஜன், பீட்டர் ராஜா ஆகியோர் மீது பல பொய் புகார் கொடுத்து தட்டார்மடம் காவல் நிலையத்தில் எனது மகன்கள் மீது பொய் வழக்குப்பதிவு செய்து துன்புறுத்திவந்தார்கள்.

இதற்கிடையில் திருமணவேல் எனது தோட்டத்திற்குள் நாட்டு வெடிகுண்டு வைத்து சேதப்படுத்தியது சம்பந்தமாக தட்டார்மடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரை வாங்க மறுத்து எனது மகன்கள் மீது காவல் ஆய்வாளர் பொய் புகார் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து பீட்டர் ராஜா லாரியை கைப்பற்றியதோடு அவரையும் அடித்து காயப்படுத்தினார்.

மேலும் பங்காரு ராஜனை ஜனவரி 19ஆம் தேதியன்று திருமணவேல், அவரது உறவினர்கள் அடித்து காயப்படுத்தியதால் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தோம்.

பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு வந்த தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் பங்காரு ராஜனை காவல் நிலையத்திற்கு அழைத்துவந்து தலைகீழாக கட்டிப்போட்டு அடித்து சித்ரவதை செய்தும் வழக்குப்பதிந்தும் அவரைச் சிறையில் அடைத்தார்.

பிணையில் வந்த எனது மகன் தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல் ஆகியோர் மீது சென்னை மனித உரிமைகள் ஆணையத்தில் வழக்குத் தாக்கல்செய்தார்.

இதனால் திருமணவேலின் தூண்டுதலில்பேரில் எனது மகன்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் பொய் வழக்குப் பதிவுசெய்து துன்புறுத்திவந்தனர். அதனால் எனது மகன்கள் முன்பிணை வேண்டி சென்னை உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் வழக்குத் தாக்கல் செய்தார்கள்.

வழக்கில் நீதியரசர் அறிவுறுத்தலின்பேரில், தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் எனது மகன்களைத் துன்புறுத்தியதை அபிடவிட்டாக பதிவுசெய்து பங்காரு ராஜன் செப்டம்பர் 16ஆம் தேதி மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல்செய்தார்.

இதனால் கோபம் கொண்டு தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனின் தூண்டுதலின்பேரில் செப்டம்பர் 17 மதியம் குறுந்தட்டு என்பவரின் மளிகைக்கடை அருகே எனது மகன் செல்வன் இருசக்கர வாகனத்தில் வந்தபோது திருமணவேல் அவரது காரில் அடையாளம் தெரியாத நபர்களுடன் வந்து அவரைத் தாக்கி காரில் கடத்திச் சென்றுவிட்டார்கள்.

உருட்டுக்கட்டையால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த எனது மகன் திசையன்விளை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்தார். தகவலறிந்து நானும் எனது மருமகள் ஜீவிதாவுடன் திசையன்விளை அரசு மருத்துவமனைக்கு வந்து பார்த்தபோது எனது மகன் இறந்த நிலையில் இருந்தார்.

அது பற்றி மருத்துவரிடம் விசாரிக்கவே எனது மகனை அடையாளம் தெரியாத நபர்கள் போட்டுவிட்டுச் சென்றதாகவும் உடல் முழுவதும் பலத்த காயங்கள் இருந்ததாகவும் கூறினார். உடனே எனது மகனைப் பார்த்தபோது தலையில் பலத்த காயமும் உடல் முழுவதும் பலத்த காயங்களுடன் சடலமாகக் கிடந்தார்.

ஆகவே திருமணவேல் எனது நிலத்தை அபகரிக்கும் நோக்குடன் செயல்பட, தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் அவருக்கு உதவும்நோக்கத்துடன் பல பொய் வழக்குகளைப் பதிவுசெய்தார்.

எனவே தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல், அவரது அடியாள்கள் மீது வழக்குப்பதிவு செய்து எனக்கும் எனது மகன்களுக்கும் பாதுகாப்பு வழங்கும்படி பணிந்து வேண்டுகிறேன்" எனக் கூறியிருந்தார்.

இதனைத் தொடர்ந்து தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல் உள்பட மேலும் சிலர் மீது (இந்திய தண்டனைச் சட்டம் 107, 336, 302, 364) கொலை வழக்கு உள்பட நான்கு பிரிவுகளில் நெல்லை மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.