தூத்துக்குடி மாவட்டத்தில் 2018ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம், நாலுமாவடி பகுதியிலுள்ள பள்ளியில் படித்துவந்த சிறுமிகளுக்கு அப்பள்ளியில் கைத்தொழில் ஆசிரியராகப் பணியாற்றிய ராஜ்குமார் முத்துபாண்டி (52) பாலியல் தொல்லை கொடுத்தார்.
இது குறித்து ஸ்ரீவைகுண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, ராஜ்குமார் முத்துபாண்டியை கைதுசெய்தனர்.
தொடர்ந்து இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இந்நிலையில் இவ்வழக்கு இன்று (நவ. 23) நீதிபதி குமார் சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி குற்றஞ்சாட்டப்பட்ட ராஜ்குமார் முத்துபாண்டிக்கு, 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.