ETV Bharat / state

தூத்துக்குடியில் புல்லட் ரெயில் திட்டம் - தமிழிசை தகவல் - வருமானவரி சோதனை

தூத்துக்குடி: தூத்துக்குடியில் புல்லட் ரெயில் திட்டம் கொண்டு வரப்படும் என்று தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

வருமானவரி சோதனையில் துரைமுருகன் வீட்டில் கட்டுக் கடங்காத பணம்- தமிழிசை
author img

By

Published : Apr 1, 2019, 4:57 PM IST

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: மத்தியில் பாஜக கூட்டணி அரசுதான் மீண்டும் ஆட்சியில் அமர போகிறது. தற்போது வருகிற கருத்து கணிப்புகள் எல்லாம் பாஜகவுக்கு ஆதரவாகதான் உள்ளது.

அதேபோல் மாநிலத்திலும் பாஜக கூட்டணி ஆட்சிதான் அமையும். நாளைய தினம் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். இதற்கான பொதுக்கூட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது என்றார்.

காங்கிரஸ் கட்சியை போன்று திமுகவும் இந்த தேர்தலில் தோல்வியைத் தழுவும். ஏனெனில் தேர்தல் சமயத்தில் வருமான வரித்துறையினர் திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் நடத்திய சோதனையில் கட்டுக்கடங்காத பணம் பிடிபட்டுள்ளது என்றார்.

மேலும், பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் தூத்துக்குடியில் தொழில் நகரமாக உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், டிரேட் சென்டர் அமைக்கப்படும் எனவும், புல்லட் ரெயில் திட்டம் கொண்டு வரப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது என்றார்.

Intro:நிறைவேற்ற முடியாத திட்டங்களை நிறைவேற்றி தருவதை பாஜக - தமிழிசை உறுதி.

Body:தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில்

மத்தியில் பாஜக கூட்டணி அரசுதான் மீண்டும் ஆட்சியில் அமர போகிறது. தற்போது வருகிற கருத்து கணிப்புகள் எல்லாம் பாஜகவுக்கு ஆதரவாக உள்ளது. அதேபோல் மாநிலத்திலும் பாஜக கூட்டணி ஆட்சிதான் அமையும். நாளைய தினம் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் என்னை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளனர். இதற்கான பொதுக்கூட்ட ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. பாஜக தேசிய தலைவர் பகல் 12 மணி அளவில் மதுரைக்கு விமானம் மூலம் வருகிறார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வருகிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராமநாதபுரத்தில் இருந்து சாலை மார்க்கமாக தூத்துக்குடிக்கு வருகிறார்கள். இந்த பிரச்சார பொதுக்கூட்டம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

இன்று காங்கிரஸ் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும். ஏனென்றால் ராகுல் காந்தி அமேதி தொகுதியிலும், கேரளாவில் வயநாட்டிலும் போட்டியிடுகிறார் என காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது. ஆனால் கேரளாவில் ராகுல் காந்தியை தோற்கடிப்போம் என பினராய் விஜயன் கூறி வருகிறார். அதே கட்சியைச் சேர்ந்த தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி ராகுல்காந்திக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்து வருகிறார். எனவே காங்கிரசாரின் தோல்வி என்பது உறுதி செய்யப்பட்டு விட்டது. அதேபோல் திமுகவும் இந்த தேர்தலில் தோல்வியைத் தழுவும். ஏனெனில் தேர்தல் சமயத்தில் வருமான வரித்துறையினர் திமுக பொருளாளர் துரைமுருகனின் வீட்டில் நடத்திய சோதனை இதற்கு ஒரு சான்று. அங்கே கட்டுக்கட்டாக பணம் பிடிபட்டுள்ளது.

வட பகுதிகளில் இருந்து வருகிற கருத்துக்கணிப்புகள் வாயிலாக நடைபெற இருக்கும் தேர்தலில் பாஜக 300 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என கூறி உள்ளனர். ஆகவே மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தான் அமையும். மத்திய அரசின் நலத் திட்டங்கள் மூலம் தமிழகத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளனர்.

தூத்துக்குடியை பொறுத்தவரையில் இந்த தொகுதியை நன்கு ஆராய்ந்த பின்னரே பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் தூத்துக்குடியில் தொழில் நகரமாக உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், டிரேட் சென்டர் அமைக்கப்படும் எனவும், புல்லட் ரெயில் திட்டம் கொண்டு வரப்படும் எனவும் கூறியுள்ளோம். நிறைவேற்ற முடியாத திட்டங்களை நிறைவேற்றி தருவது தான் பாஜக. எனவே தூத்துக்குடியை ஒரு தொழில் முனைவோர் நகரமாக மாற்ற கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படும். வீட்டில் ஒருவருக்கு நிச்சயமாக அவர்களின் பொருளாதாரத்தை முன்னேற்றும் வகையில் சுய தொழில் அல்லது தனியார் துறையில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோல் சாலை வசதி, குடிநீர் வசதி, பனை பொருள் மறுவாழ்வுத் திட்டங்கள், வாழை நாரிலிருந்து ஆடை தயாரிப்பது உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்த பாஜக தீர்மானித்துள்ளது. ஆகவே இந்த தேர்தலில் மக்கள் பாஜகவிற்கு வாக்களித்து சேவை செய்வதற்கு வாய்ப்பு தர வேண்டும் என கூறினார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.