தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, ராஜ்யசபா உறுப்பினர் வருகைப் பதிவில் கடைசி மூன்று இடத்தில் உள்ள நபர்களில் கனிமொழியும் ஒருவர். அவர் உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் வெறும் 56 சதவீதம் மட்டுமே கூட்டங்களில் பங்கெடுத்துள்ளார். மாநிலத்தில் ஆண்டுக்கு 21 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று கனிமொழி சொல்வது தவறான தகவல்.
மத்தியில் காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் ஆட்சியில் இருக்கும் போதுதான் விவசாயிகளுக்கு யூரியா கூட கிடைக்காத நிலை ஏற்பட்டது. அவர்களது ஆட்சியில்தான் விவசாயிகளும் அதிக அளவில் தற்கொலை செய்து கொண்டனர்.
காலியாக உள்ள 3 சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம்தான் அறிவிக்க வேண்டும். மேலும் ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு என்னவென்று அவர்களது தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனரா என்று கேள்வி எழுப்பினார்.