ETV Bharat / state

எதிர்க்கட்சிகள் சதியில் விவசாயிகள் விழுந்து விடக்கூடாது - ஜி.கே.வாசன் - தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

அரசியலுக்காக எதிர்க்கட்சிகள் செய்யும் சதியில் விவசாயிகள் விழுந்து விடக்கூடாது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

MP G. K. Vasan
MP G. K. Vasan
author img

By

Published : Dec 17, 2020, 8:55 PM IST

தூத்துக்குடி: புதிய வேளாண் சட்டத்தின் முழுமையான பலன்களை நன்கு அறிந்த பின்னர் தான் தமிழ்நாடு அரசு ஆதரித்துள்ளது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் ஓட்டப்பிடராம் சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.எஸ்.வேலுச்சாமி கடந்த சில மாதங்களுக்கு முன் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் அவரது இல்லத்தில் படத் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஜி.கே.வாசன் திருவுருவ படத்தினை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செய்தார்.

எம்பி ஜி.கே.வாசன் செய்தியாளர் சந்திப்பு

இதில், தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ, விளாத்திகுளம் எம்எல்ஏ சின்னப்பன் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து சமீபத்தில் காஷ்மீரில் உயிரிழந்த திட்டங்குளம் ராணுவ வீரர் கருப்பசாமி இல்லத்திற்கு அவரது குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினர்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே.வாசன் கூறியதாவது;

எங்கள் கூட்டணியின் முதன்மை கட்சியாக அதிமுக உள்ளது. இந்தக் கூட்டணி வெற்றி கூட்டணியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதிமுக அரசு மக்களின் நம்பிக்கையை பெற்ற அரசாக உள்ளது. அனைத்து துறைகளிலும் புதிய திட்டங்களை தந்து மக்களின் நம்பிக்கையைப் பெற்று கொண்டிருக்கிறது.

எங்கள் கூட்டணிக்கு மக்கள் முழு அங்கீகாரம் கொடுப்பார்கள் என்று நம்புகிறோம். புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகளின் போராட்டம் வருத்தமளிக்கிறது. மத்திய, மாநில அரசுகள் விவசாயத்தை சார்ந்தவை. விவசாயிகளின் வருங்காலம், வளர்ச்சி வருமானம், வாழ்வாதாரம் இதனை கணக்கில் கொண்டுதான் விவசாயத்திற்காக விவசாய சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

புதிய விவசாய சட்டத்தின் முழுமையான பலன்களை நன்கு அறிந்த பின்னர் தான் தமிழ்நாடு அரசு ஆதரித்துள்ளது. இப்படி இருக்க கூடிய சூழ்நிலையில் ஒரு சிலரின் தூண்டுதலால் விவசாயிகள் போராட்டம் செய்யக்கூடிய துரதிர்ஷ்டவசமான நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசை பொறுத்தவரை பலமுறை பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது. கவுரவம் பார்க்காமல் தொடர்ந்து பேச அரசு தயாராக இருக்கிறது.

எனவே, விவசாயிகள் தங்களது நன்மையைக் கருதி, அரசியலுக்காக எதிர்க்கட்சிகள் செய்யும் சதியில் விழுந்து விடக்ககூடாது. நீதிமன்றம் கூறியது போன்று ஒரு குழு அமைத்து மத்திய அரசுடன் பேசி நன்மை பயக்கக்கூடிய நல்ல நிலையை வரும் நாட்களில் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் விவசாயிகளுக்கு எங்களுடைய வேண்டுகோள் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: அச்சுறுத்தலுக்கு அஞ்சமாட்டோம் - மாஸ் காட்டும் மம்தா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.