சென்னை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் உமையொருபாகம். இவருக்கு உயரதிகாரிகள் அதிகப்படியான பணிகளை ஒதுக்கி பனிச்சுமையை அதிகப்படித்தியதாக தெரிகிறது.
இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான உமையொருபாகம் மூன்று நாள் விடுப்பு கேட்டதற்கு, அதிகாரிகள் தர மறுத்துள்ளனர். இதனையடுத்து கடந்த 8ம் தேதி முதல் 30ம் தேதி வரை மருத்துவ விடுப்பில் சொந்த ஊரான ராமச்சந்திரபுரத்துக்கு வந்துள்ளார்.
விடுப்பில் வந்த பிறகும் உயரதிகாரிகள் தொலைபேசி மூலம் மேலும் அழுத்தம் கொடுத்ததால், வெறுப்புற்ற உமையொருபாகம் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக அவரது மகள் ஸ்ரீதேவி, தூத்துக்குடி புதுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து, வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் உதவி ஆய்வாளர் உமையொருபாகத்தின் உடலைக் கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
போலீஸ் அதிகாரிகளுக்கான பணிப்பலன்கள் அதிகமாக கிடைக்கப் பெறுகிறது என்றாலும் , அவர்களுக்கான பனிச்சுமையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.
மேலதிகாரிகளின் டார்ச்சராலும், அதிகமான பனிச்சுமையாலும் கடந்த 10 ஆண்டுகளில் 296 போலீசார் தற்கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.