ETV Bharat / state

தந்தை இறந்த துக்கத்திலும் கரோனா நிவாரண நிதி வழங்கிய மாணவி: கனிமொழி எம்.பி. நெகிழ்ச்சி - Thoothukudi latest news

தூத்துக்குடி: தந்தை இறந்த துக்கத்திலும் கரோனா நிவாரண நிதி வழங்கிய மாணவியின் செயலைப் பார்த்து கனிமொழி எம்.பி. நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

கரோனா நிவாரண நிதி வழங்கிய மாணவி
கரோனா நிவாரண நிதி வழங்கிய மாணவி
author img

By

Published : May 15, 2021, 9:28 PM IST

தமிழ்நாட்டில் கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த அரசு முழு ஊரடங்கு உத்தரவைக் கடந்த 10ஆம் தேதி முதல் அமல்படுத்தியுள்ளது. கரோனா மருத்துவ சிகிச்சைக்காக உலகத்தமிழர்கள் நிதி உதவி அளித்து உதவிடுமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதைத் தொடர்ந்து, மதுரையைச் சேர்ந்த பள்ளி சிறுவன் முதல் நடிகர், நடிகைகள், தன்னார்வலர்கள், சமுதாய அமைப்பினர், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தங்களால் இயன்ற பண உதவி அளித்து வருகின்றனர்.

கரோனா நிவாரண நிதி வழங்கிய மாணவி

இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாண்டவர்மங்கலத்தைச் சேர்ந்த 8ஆம் வகுப்பு மாணவி ரிதானா (12), தன் தந்தை மருத்துவ செலவுக்காக சிறுக சிறுக சேமித்து வைத்து இருந்த 1,970 ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.

  • தந்தையை இழந்த இத்துயர தருணத்திலும் ரிதானாவின் இச்செயல் இப்பேரிடரை நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெல்வோம் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியது. மனிதநேயம் மட்டுமே மானிடத்தை காக்கும். (2/2)#TNCMReliefFund pic.twitter.com/du5EZS3P1Z

    — Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) May 15, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

குறிப்பாக, கடந்த பிப்ரவரி மாதம் மாரடைப்பால் மாணவியின் தந்தை நாகராஜன் உயிரிழந்தார்.

தந்தை இறந்த துக்கத்திலும் கரோனா நிவாரண நிதி வழங்கிய மாணவியின் செயலைப் பார்த்து கனிமொழி எம்.பி. நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.

இது குறித்து கனிமொழி எம்.பி. தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, "கோவில்பட்டி சிறுமி ரிதானா தன் தந்தையின் மருத்துவச் செலவிற்காக தான் சேமித்து வைத்திருந்த 1,970 ரூபாயை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக என்னிடம் வழங்கினார்.

தந்தையை இழந்த இத்துயர தருணத்திலும் ரிதனாவின் இச்செயல் இப்பேரிடரை நாம் அனைவரும் ஒன்றிணைந்து வெல்வோம் என்ற நம்பிக்கையை வலுப்படுத்தியது. மனிதநேயம் மட்டுமே மானிடத்தை காக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மரணத்தில் துளிர்த்த மத நல்லிணக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.