ETV Bharat / state

அரசு அலுவலகங்களில் ஊழலை ஊக்குவிக்கும் ஸ்டெர்லைட்

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையின் ஊழல்மய நடவடிக்கைகளை தடுக்கவில்லையெனில் மக்கள் போராட்டம் நடைபெறும் என ஸ்டெர்லைட் எதிர்ப்பு குழுவினர் லஞ்ச ஒழிப்பு துறையிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

Sterlite promotes corruption in government offices
author img

By

Published : Sep 13, 2019, 4:10 PM IST

இது தொடர்பாக ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில்,

”தூத்துக்குடி மாவட்டத்தில் நிலம், நீர், காற்று, கடல் என அனைத்தையும் நஞ்சாக்கிய ஸ்டெர்லைட் ஆலை இன்று மக்களிடையே சாதி ரீதியான பிளவுகளை ஏற்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடிய பின்பும், மாநகராட்சி அலுவலகம், காவல் துறை உள்ளிட்ட இடங்களில் அரசின் கொள்கைகளை எதிர்க்கும் விதமாக ஸ்டெர்லைட் ஆலை ஊழல்மய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

இதை தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. எனவே, அரசு கொள்கை முடிவு எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடியது வெறும் கண்துடைப்பிறேகே என்ற அச்சம் எங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்களில் ஊழலை ஊக்குவிக்கும் ஸ்டெர்லைட்

ஆகவே இத்தகைய ஊழல்மய செயல்களில் ஈடுபட்டுவரும் ஸ்டெர்லைட் நிறுவன அலுவலர்களின் மீதும், அதற்கு துணையாக இருக்கும் பணியாளர்களின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் புகார் அளித்தோம்.

இத்தகைய செயல்கள் தடுத்து நிறுத்தப்படவில்லை எனில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் மீண்டும் மிகப்பெரிய அளவில் மக்கள் எழுச்சி போராட்டம் நடைபெறும்” என்றனர்.

Intro:ஸ்டெர்லைட் ஆலையின் ஊழல்மய நடவடிக்கைகளை தடுக்கவில்லையெனில் மக்கள் போராட்டம் நடைபெறும் - ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு கிருஷ்ணமூர்த்தி பேட்டிBody:
தூத்துக்குடி

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்கத்தினர் தூத்துக்குடி மறவன்மடத்திலுள்ள லஞ்ச ஒழிப்பு துறை துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று ஒரு புகார் மனு அளித்தனர்.

தொடர்ந்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் இயக்க இயக்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கையில்,
தூத்துக்குடி மாவட்டத்தில் நிலம், நீர், காற்று, கடல் என அனைத்தையும் நஞ்சாக்கிய ஸ்டெர்லைட் ஆலை இன்று மக்களிடையே சாதிரீதியான பிளவுகளை ஏற்படுத்தி பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளது.
தமிழக அரசு கொள்கை முடிவு எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை இழுத்து மூடியதன் பின்பு தமிழக அரசின் கொள்கைகளை எதிர்த்து செயல்படும் விதமாக ஸ்டெர்லைட் ஆலை ஊழல்மய நடவடிக்கைகளை செயல்படுத்தும்விதமாக தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம், காவல்துறை உள்ளிட்ட இடங்களில் முயற்சிகளை எடுத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு அலுவலகங்களை ஊழல் மயமாக்கும் நடவடிக்கைகளில் ஸ்டெர்லைட் நிறுவனம் இறங்கியுள்ளது. இதை தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது. இதனால், அரசு கொள்கை முடிவு எடுத்து ஸ்டெர்லைட் ஆலையை மூடியது வெறும் கண்துடைப்புகோ என்ற அச்சம் எங்களுக்கு உருவாகியுள்ளது.

ஆலையை மூடிய பிறகும் ஸ்டெர்லைட் நிறுவனத்தினர் நேரடியாகவே கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில் பணத்தின் மூலமாக மக்களிடையே சாதி ரீதியாக பிளவை ஏற்படுத்தி வேற்றுமையை உருவாக்க முயற்சிக்கிறார்கள்.
ஆகவே இத்தகைய ஊழல்மய செயல்களில் ஈடுபடும் ஸ்டெர்லைட் நிறுவன அதிகாரியின் மீதும் அதற்கு துணையாக இருக்கும் பணியாளர்களின் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம்.

இது தடுத்து நிறுத்தப்படவில்லை எனில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் மீண்டும் மிகப்பெரிய அளவில் மக்கள் எழுச்சி போராட்டம் நடைபெறும் என்றார்.

பேட்டி: கிருஷ்ணமூர்த்தி. ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.