ETV Bharat / state

கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர்கள் சாதனை - முதுகெலும்பில் மேற்கொண்ட சிகிச்சை என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 20, 2023, 12:05 PM IST

Spinal bone transplant surgery: கோவில்பட்டி அரசு மருத்துமனையில் முதன் முறையாக ஓட்டுநர் ஒருவருக்கு முதுகெலும்பு மாற்று அறுவை சிகிச்சையை அரசு மருத்துவர்கள் வெற்றிகரமாக முடித்து சாதனை செய்துள்ளனர்.

spinal bone transplant surgery
முதல் முறையாக முதுகு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை
முதல் முறையாக முதுகு எலும்பு மாற்று அறுவை சிகிச்சை.. டிரைவர் வாழ்வில் ஒளியேற்றிய அரசு மருத்துவர்கள்!

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி ஊராட்சி சிந்தாமணி நகரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (55). இவருக்கு மாரியம்மாள் என்பவருடன் திருமணமாகி ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்நிலையில் லோடு ஆட்டோ ஓட்டுநரான பழனிச்சாமி, கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி தனது ஆட்டோவில் கோவில்பட்டியில் இருந்து விருதுநகர் மாவட்டம் மீனாட்சிபுரத்துக்கு சென்ட்ரிங் பலகைகளை ஏற்றிக் கொண்டு சென்றுள்ளார்.

பின்னர் அவற்றை இறக்கிவிட்டு, மதுரை - திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் திரும்பி வரும்போது, தனியார் பள்ளி பகுதியில் பின்னால் வந்த கார் ஒன்று லோடு ஆட்டோ மீது மோதியுள்ளது. இதில், லோடு ஆட்டோ சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகி உள்ளது. மேலும், அந்த விபத்தில் பழனிச்சாமி காயமடைந்துள்ளார்.

பின்னர் அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோவில்பட்டியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்து அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் முதலுதவி அளித்துள்ளனர். ஆனால், பழனிச்சாமியால் எழுந்து அமரவோ, நடக்கவோ முடியவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும், முதுகுப் பகுதியில் கடும் வலியால் அவதிப்பட்ட அவருக்கு ஸ்கேன் பரிசோதனை செய்தபோது, நடு முதுகு எலும்புப் பகுதியில் 2 இடத்தில் முறிவு ஏற்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு வலியைக் குறைக்கும் மருந்துகளை மருத்துவர்கள் அளித்துள்ளனர். பின்னர் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடுத் திட்டத்தின் கீழ், அறுவை சிகிச்சை மேற்கொள்ள அனுமதி பெற்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, கடந்த அக்டோபர் 5ஆம் தேதி மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் பாலகிருஷ்ணன் தலைமையில் மருத்துவர்கள் பாண்டிபிரகாஷ், மோசஸ்பால், மனோஜ்குமார், மயக்க மருந்து நிபுணர் இளங்கோ உள்ளிட்டோர் கொண்ட மருத்துவ குழுவினரால் பழனிச்சாமிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து 14 நாட்கள் கண்காணிப்பில் இருந்த பழனிச்சாமி, இன்று சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் பாலகிருஷ்ணன் கூறுகையில், “முதுகு பகுதி எலும்பில் ஏற்படும் முறிவு அறுவை சிகிச்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில்தான் நடந்து வந்தது. முதன் முறையாக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் வெற்றிகரமாக நாங்கள் மேற்கொண்டுள்ளோம். விபத்தில் சிக்கிய பழனிச்சாமிக்கு நடந்த ஸ்கேன் பரிசோதனையில், அவரது நடு முதுகு எலும்பில் 2 இடங்களில் முறிவு இருந்த கண்டறியப்பட்டது.

இதையடுத்து இணை இயக்குநர் (பொறுப்பு) மருத்துவர் அகத்தியன் வழிகாட்டுதல்படி, அறுவை சிகிச்சை செய்து முடித்தோம். இதற்காக 10 செ.மீ உயரத்திலான 2 டைட்டானியம் கம்பிகள் வைக்கப்பட்டு, 4 ஸ்க்ரூக்கள் பொருத்தப்பட்டன. சாதாரணக் கம்பியை விட டைட்டானியம் கம்பிகளில் தொற்று ஏற்படும் சாத்தியம் குறைவு. தொடர்ந்து 3 நாளில் இருந்து அவருக்கு இயன்முறை (பிசியோதெரபி) பயிற்சியும், நடைபயிற்சியும் வழங்கினோம்.

கடந்த 14 நாட்கள் எங்களது கண்காணிப்பில் வைத்திருந்து, இன்று அவரை சிகிச்சை முடித்து அனுப்புகிறோம். அவருக்கு சில பயிற்சிகளை கற்றுக் கொடுத்துள்ளோம். அதனை அவர் வீட்டில் இருந்தவாறே செய்ய வேண்டும். மேலும், 3 மாத ஓய்வுக்குப் பின்னர் அவர் வேலைக்குச் செல்லலாம். அடுத்து 6 மாதங்கள் வரை, மாதம் ஒரு முறை அவரை பரிசோதனைக்கு வர வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம்” என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து சிகிச்சை பெற்ற பழனிச்சாமி கூறுகையில், “விபத்து நடந்தபின் என்னால் எழ முடியவில்லை. பயந்து விட்டேன். கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் என்னை பரிசோதித்த டாக்டர்கள், முதுகு தண்டுவடத்தில் ஆபரேஷன் செய்ய வேண்டும் என்றார்கள். 15 நாட்கள் உட்கார முடியவில்லை. ஆபரேஷன் செய்யப்பட்ட பின் என்னால் உட்கார முடிகிறது. நடக்க முடிகிறது.

மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைவரும் என்னை நன்கு கவனித்துக் கொண்ட காரணத்தால், இன்று என்னால் நடக்க முடிகிறது. இதே அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனையில் செய்தால், மூன்று லட்சம் ரூபாய் வரை செலவு ஆகியிருக்கும்” என்றார்.

இதையும் படிங்க: பிரணவ் ஜுவல்லரி பண மோசடி; திருச்சியில் பொருளாதார குற்றப்பிரிவினர் அதிரடி சோதனை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.