ETV Bharat / state

தற்சார்பு உழவம், கால்நடை வளர்ப்பு.. இதைவிட வேற என்னங்க வேணும்? கலக்கும் முன்னாள் எம்எல்ஏ

இயற்கை விவசாயம், சூழலியல் பசுமை, முறைசார் கால்நடை வளர்ப்பு போன்றவற்றை செய்பவர்கள் உழவர்கள் மட்டுமல்ல, அவர்கள் தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் விஞ்ஞானிகளும்கூட. அவர்களுள் ஒருவர்தான் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன். தற்சார்பு விவசாயத்தில் சாதித்துவரும் அவர் குறித்த செய்தித் தொகுப்பு...

Ex MLA markandeyan self reliance agriculture

author img

By

Published : Jul 28, 2020, 7:31 PM IST

Updated : Aug 2, 2020, 2:36 PM IST

அம்பாள் கோசாலை இயற்கை வேளாண் பண்ணை:

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் அமைந்துள்ளது "அம்பாள் கோசாலை". சுமார் 20 ஏக்கர் பரப்பளவில் பசுமை சூழல் சார்ந்த இடமாக முற்றிலும் ஆர்கானிக் விவசாய பண்ணையாக இது உருவெடுத்து நிற்கிறது. பசுமை பண்ணையின் முகப்பிலேயே வருவோரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பறவைகளுக்கான வாழ்விடம் அமைக்கப்பட்டுள்ளது. அகன்று விரிந்த பண்ணையின் இடது பக்கமாக மாட்டுப் பண்ணையும், வலதுபுறமாக ஆட்டுப் பண்ணையும் அமைக்கப்பட்டுள்ளது.

மாட்டுப் பண்ணையை தொடர்ந்து பயோ-கேஸ் உற்பத்தி செய்யும் வளாகம், அதையடுத்து மின்சாரம் பிரித்தெடுக்கும் பகுதி, அதையடுத்து பனைத் தோப்பு, கருப்பட்டி காய்ச்சும் பகுதி, பாலிஹவுஸ், இயற்கை சாண உரம் தயாரிக்கும் பகுதி, கொய்யா சாகுபடி, மேய்ச்சலுக்கான இடம், வாத்துக்குட்டை என அடுக்கடுக்கான அமைப்புகள் நம்மை கண்ணுயரச் செய்கிறன.

பொதுவாக ஆள், படை, பலம், அம்பாரி, அரசியல் பின்புலம் உள்ளவர்கள் அலட்டலாய் வலம்வரும் நிலையில் அவர்களுக்கு மத்தியில், ஓசையின்றி எளிமையாய், தன்னைச் சேர்ந்தோர்க்கு, தான் உருவாக்கியிருக்கும் "அம்பாள் கோசாலை இயற்கை வேளாண் பண்ணை" மூலமாக உணவு, உறையுள், மின்சாரம், எரிவாயு, பணம் என உயிர்வாழ தேவையான அனைத்தும் மறுக்காமல் வழங்கிவருகிறார்" முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன்.

தற்சார்பு உழவத்தில் கலக்கும் முன்னாள் எம்எல்ஏ

தூத்துக்குடி மாவட்டம் ராமச்சந்திரபுரத்தை சேர்ந்தவர் மார்க்கண்டேயன். அரசியல் பிரமுகர். அதிமுக கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளராக இருந்தவர். 10 ஆண்டுகள் புதூர் ஊராட்சி மன்றத் தலைவராகவும், 5 ஆண்டுகள் விளாத்திகுளம் தொகுதியின் எம்எல்ஏவாகவும் பணியாற்றியுள்ள இவர் அடிப்படையில் ஒரு விவசாயி.

தன் பண்ணையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்த அவரிடம் மானாவாரி பகுதியான விளாத்திகுளத்தில் 20 ஏக்கர் பரப்பை இயற்கை வேளாண் பகுதியாக சாத்தியப்படுத்தியது குறித்து கேட்டோம்.

கறவை மாடுகள்:

"அடிப்படையில் நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன். ஆகவே எனக்கு விவசாயத்தின் மீது ஈடுபாடு இருந்தது. நான் வழக்கறிஞர் படிப்பை முடித்த பின்னர் விவசாயம் சார்ந்து பணிகளில் ஈடுபட விரும்பினேன். எனவே இதுகுறித்து யோசிக்கும்போது எனது மகன் கொடுத்த ஆலோசனைபடி 2012ல் இயற்கை மாட்டுப்பண்ணையாக ஆரம்பித்ததுதான் அம்பாள் கோசாலை.

ஆரம்பத்தில் 250க்கும் மேற்பட்ட பசு மாடுகள் வைத்து பண்ணை நடத்திவந்தேன். பின்னாளில் நிர்வாக காரணங்களுக்காக மாற்றம் செய்தேன். தற்பொழுது கோசாலையில் கிர், ஜெர்ஸி, நாட்டு மாடு, சிந்து கலப்பினமாடுகள் என 30க்கும் மேற்பட்ட பசு மாடுகள் கட்டப்பட்டுள்ளன.

மாடுகளை கட்டுவதற்கு ஏதுவாக ஓடுகளால் வேயப்பட்ட கொட்டகை அமைக்கப்பட்டுள்ளது. பசு மாடுகள் பொதுவாக வெப்பத்தை அதிகம் தாங்காது. தூத்துக்குடி மாவட்டம் வெப்பமான பகுதி என்பதால் மாடுகளுக்கு உடல் உஷ்ணம் சம்பந்தமான நோய் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க கொட்டகையினுள் 15 மின் விசிறிகளை அமைத்துள்ளேன். இதுபோக உடல் உஷ்ணத்தை தணிக்கும் வகையில் தானியங்கி நீர் தெளிப்பானும் பொருத்தப்பட்டுள்ளது‌.

Ex MLA markandeyan self reliance agriculture
கால்நடை வளர்ப்பு

மேலும் மாடுகள் சிமெண்ட் தரையில் அமர்ந்து எழுந்திருக்கும்பொழுது தரையில் மோதி கால்களில் புண் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மாடுகளுக்கு இதுமாதிரியான பிரச்னைகள் எதுவும் வந்துவிடக்கூடாது என்பதற்காக சிமெண்ட் தரையின் மேலே ரப்பர் சீட்டுகள் போடப்பட்டுள்ளன.

இதனால் அவைகளுக்கு ஒருவித சொகுசு ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. மாடுகளுக்கு தினமும் ஐந்து வேளை கம்பு, சோளம், புண்ணாக்கு கலந்த அடர் தீவனமும், 50 விழுக்காடு பசுந்தீவனமும் உணவாக வழங்கப்படுகிறது. மாட்டுச்சாணம், மாட்டு சிறுநீர் உள்ளிட்டவை எதுவும் வீணாக்கப்படாமல் அவற்றை எரிவாயுவாக மாற்றுவதற்கும் இங்கு கட்டமைப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மாடுகள் ஒவ்வொருமுறை கழிக்கும் சிறுநீரும் கொட்டகையினுள் அமைக்கப்பட்டிருக்கும் கால்வாய் வழியே பயோ-கேஸ் உற்பத்தி செய்யும் தொட்டிக்கு அனுப்பப்படுகிறது. தினமும் 250 லிட்டர் கறக்கப்படும் பால் வீட்டுத் தேவை, பணியாளர்களின் தேவைக்கு போக மீதி வெளியே சில்லறை வியாபாரத்திற்காக கொடுக்கிறோம். பாலில் இருந்து நெய், வெண்ணை உள்ளிட்ட மதிப்புக்கூட்டு பொருள்களையும் இயற்கை முறையில் தயார்செய்கிறோம். இதன்மூலம் நாளொன்றுக்கு 12 ஆயிரத்து 500 ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

பரண் ஆடு வளர்ப்பு:

ஆடு வளர்ப்பு முறையில் பரண்மேல் ஆடு வளர்த்தலை கடைபிடித்துவருகிறேன். மூங்கில் கம்பால் வேயப்பட்ட பரண் அமைத்து அதை மூன்று பிரிவுகளாக்கி தரத்திற்கு ஏற்றவாறு 70 ஆட்டுக் குட்டிகளை பரணில் வளர்த்துவருகிறேன்.

சுற்றிலும் கம்பி வைத்து கட்டப்பட்ட வேலியில் ஆடுகளுக்கு தொட்டியில் அடர்தீவனம் வழங்கப்படுகிறது. ஆடுகள் இடும் புழுக்கைகள், சிறுநீர் போன்றவை பரண் இடுக்கு ஓட்டைகள் வழியே கீழே வந்து விழுகின்றன. இவை நொதியாகி உருவாகும் சிறு பூச்சிகள், புழுக்களை பண்ணையில் வளரும் 100 கோழிகள் சாப்பிடுகின்றன.

ஆடுகள் வளர்ப்பு

இங்கு நாட்டுக் கோழி, சேவல், கின்னி கோழி, வான்கோழி உள்ளிட்டவை வளர்ந்து வருகின்றன. இதனால் இயற்கையான உணவு சுழற்சி முறை நடைபெறுவதை நாம் பார்க்க முடியும். பண்ணையில் ஆடு, மாடுகளை பராமரிப்பதற்குத் தேவையான தண்ணீர்த் தொட்டி இதன் அருகிலேயே அமைக்கப்பட்டுள்ளது. ரூ. 4000 மதிப்பில் கிடைக்கும் குட்டிகள் 10 மாதத்தில் ஈற்று நிலைக்கு வந்தபின் ரூ. 12, 000 வரை விலை போகும்.

பயோ-கேஸ், மின்சாரம் தயாரிப்பு:

தற்போது உள்ள சூழலுக்கு தற்சார்பு பொருளாதாரம் மிக தேவையானது. வெகு ஆண்டுகளுக்கு முன்பே தற்சார்பு பொருளாதாரத்தை குறித்து வலியுறுத்தியவர் ஜே.சி. குமரப்பா. அவரை பெருமைப்படுத்தும் விதமாக அவரது பெயரில் தனி வளாகம் ஒன்றை ஒதுக்கி அங்கு பயோ-கேஸ், மின்சாரம் உற்பத்தி செய்துவருகிறேன்.

மாட்டுக் கொட்டகையின் பின்புறம் அமைக்கப்பட்டுள்ள இந்த பகுதியில் உள்ள தொட்டியில் மாட்டுச் சாணமும், சிறுநீரும் சேமிக்கப்படுகிறது. தண்ணீர் கலந்து சேமிக்கப்படும் இந்த தொட்டியில் மின்சார இறக்கைகள் மூலம் மாட்டு சாணமும், சிறுநீரும் கலவை இடப்படுகிறது.

அதன் அருகிலேயே மற்றொரு மூடியத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. இந்தத் தொட்டியில் கலவை இடப்பட்ட மாட்டுசாணம் மோட்டார் மூலம் பம்ப் செய்யப்பட்டு 10 முதல் 12 நாள்கள் வரை நொதிக்கப்படுகிறது.

கலக்கும் முன்னாள் எம்எல்ஏ

இவ்வாறு நொதிப்பதன் மூலமாக உருவாகும் மீத்தேன் வாயுவானது பயோ கேஸாகவும், மின்சாரமாகவும் பயன்படுத்தப்படுகிறது. இதன் மூலம் மூலமாக 15 கிலோ வாட் மின்சாரமும் தயாரிக்கிறேன். இவ்வாறு தயாரிக்கப்படும் மின்சாரத்தினை தொடர்ந்து 8 மணி நேரம் பயன்படுத்தலாம். இதனால் எனக்கு மின்சார கட்டணத்தில் பெருமளவு மிச்சமாகிறது.

பயோ கேஸ் எரிவாயு மூலமாக பண்ணையிலுள்ள வேலையாட்களுக்கு சமைப்பதற்கு தேவையான எரிவாயு வழங்கப்படுகிறது. தொட்டிக்குள் இருந்து 12 நாட்களுக்கு பிறகு வெளியேற்றப்படும் சிலேரி கழிவானது இயற்கை சாண உரமாக பண்ணையிலுள்ள பாலி ஹவுஸ், மேய்ச்சல் நிலங்களில் கீரை வளர்ப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. இதனை வெளி சந்தைகளிலும் கிலோ 5 ரூபாய்க்கு விற்கிறோம். தற்சார்பு முறையில் பயோ-கேஸ், மின்சாரம் தயாரிப்பதன் மூலம் நாளொன்றுக்கு ரூ. 5000 வருமானம் கிடைக்கிறது.

தற்சார்பு வேளாண்மையில் கலக்கும் பட்டதாரி சகோதரர்கள்!

பாலிஹவுஸ் பண்ணை விவசாயம்:

எரிவாயு உற்பத்தி பகுதிக்கும் பாலிஹவுஸ் பகுதிக்கும் இடையில் பனை மரங்களை வைத்துள்ளேன். பனை மரங்களிலிருந்து இறக்கப்படும் பதநீர் பணியாட்கள் தேவைக்கும், சேவைக்கும், வீட்டிற்கும் எடுக்கப்படுகிறது. மீதமாகும் பதநீரை மதிப்பு கூட்டு பொருளாக கருப்பட்டி செய்து சந்தைப்படுத்துகிறோம்.

அம்பாள் கோசாலைக்குள் மூன்று இடங்களில் அகிலன், நம்மாழ்வார், எம்.எஸ். சுவாமிநாதன் ஆகிய பெயர்களில் பாலிஹவுஸ் அமைத்து பண்ணை விவசாயம் செய்துவருகிறோம். பாலி ஹவுஸில் வெள்ளரி, வெண்டைக்காய், சீனி அவரைக்காய், கத்தரி உள்ளிட்டவைகள் பயிரிடப்படுகின்றன. இங்கு விளையும் காய்கறிகள் அறுவடை செய்யப்பட்டு பணியாள்களுக்கும், வீட்டு தேவைகளுக்குமே பயன்படுத்தப்படுகிறது.

முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன்

இதனையடுத்து பருவத்திற்கு ஏற்றார்போல் கோசாலையில் கொய்யா, முருங்கை, முந்திரி, கீரை, வெள்ளரி, கம்பு, உளுந்து, மக்காச்சோளம், பாசிப்பயறு, மிளகாய், சூரியகாந்தி, கத்தரி உள்ளிட்டவை பயிரிடப்படுகின்றன. இவை அனைத்துக்குமே பண்ணையிலிருந்து தயார் செய்யப்படும் மாட்டு சாண உரத்தைதான் பயன்படுத்துகிறோம்.

மேலும் பண்ணையில் கடைக்கோடி வடக்கு பகுதியில் வாத்துக்குட்டை அமைத்துள்ளோம். இதில் அன்னப் பறவை போன்ற வாத்துகள், நாட்டு இன ரகங்கள் என மொத்தம் 40 எண்ணங்கள் வளர்க்கப்படுகின்றன. இது தவிர 1,500 மீன்குஞ்சுகளும் வளர்த்துவருகிறோம்‌.

வீட்டு இறைச்சி தேவைக்கும் பண்ணை பணியாட்கள் உணவு தேவைக்கும் இந்த குட்டையில் இருந்து மீன் பிடிக்கப்பட்டு உணவு சமைக்கப்படுகிறது. வெளியே யாரும் வாங்குவதில்லை. மேலும் வாத்து முட்டைகளை எங்களுக்காகவே பயன்படுத்திவருகிறோம்.

"தற்சார்பு வாய்ச்சொல் அல்ல வாழ்க்கை" - அசத்தும் 'மா' சாகுபடி விவசாயி!

நாட்டுக்கோழி வளர்ப்பு:

ஆடுகளைப்போலவே பரண் அமைத்து நாட்டுக்கோழி வளர்ப்பிலும் ஈடுபட்டுவருகிறோம். நாட்டுக்கோழி வளர்ப்பு முறையை இன்னும் பெரிதுபடுத்த திட்டமிட்டுள்ளேன். இன்குபேட்டர் மூலமாக நாட்டுக்கோழிகளை வளர்த்து பண்ணை மேய்ச்சல், பசுந்தீவனம், பஞ்சகவ்வியம் உள்ளிட்டவையை உணவாகத் தந்து நாட்டுக்கோழி வளர்ப்பில் ஈடுபடுவதற்கும் திட்டமிட்டுள்ளேன்.

இதற்காக 20 ஏக்கர் நிலம் தனியே ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் திட்டமிட்டபடி நாட்டுக்கோழிகளை வளர்த்து லாபம் ஈட்டினால் வருகிற லாபத்தில் 25 விழுக்காடு பணியாளருக்கு ஊதியமாக வழங்கவும், அதற்கிடையில் மதிப்பூதியமாக மாதம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் மார்க்கண்டேயன்

தற்சார்பு மூலம் ஸ்டீவ் ஜாப்ஸ், பில்கேட்ஸ் போன்றவர்களைப்போல பணத்தை ஈட்ட முடியாவிட்டாலும் மனதிற்கு நிம்மதியை சம்பாதிக்க முடியும். பல வல்லரசு நாடுகளுக்கு இணையாக இந்தியா உருவாக வேண்டுமென்றால் அது தற்சார்பு கொள்கையினால் மட்டுமே முடியும்.

வல்லரசு நாடுகளை காட்டிலும் மேலான வளர்ச்சியை அடைய ஒரு துறை இருக்குமென்றால் அது தற்சார்பு பொருளாதார துறைதான். எனவே தற்சார்பு பொருளாதாரக் கொள்கையை பின்பற்ற இளைஞர்கள் முன்வர வேண்டும் அதற்கு தற்சார்பு பொருளாதார கொள்கை மூலமாக நமக்கு மட்டுமல்லாது நம்மைச் சுற்றி இருப்போரின் தேவைகளையும் பூர்த்திசெய்து முன்னேற்றத்திற்கு வழிவகுக்க முடியும் என்பதற்கு சாட்சியாகதான் இந்த கட்டமைப்புகளை ஏற்படுத்திஇருக்கிறேன்.

தற்சார்பு கொள்கையில் சமரசம் இல்லாமல் வாழ்ந்துவரும் மார்க்கண்டேயன் இக்கால இளைஞர்களுக்கு மிகப்பெரிய உந்து சக்தியாகவும், தற்சார்பு பொருளாதாரத்தை அமைத்துக்கொண்டதில் முன்னோடியாகவும் திகழ்ந்துவருகிறார் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

தனக்கு தேவையானவற்றில் சமரசம் செய்து கொள்ளாதவனே தீமையின் பிடிக்குள் சிக்கமறுக்கிறான் எனவே தீமையின் பிடியில் சிக்காதிருக்கும் மார்க்கண்டேயனை பின்பற்றி இளைஞர்கள்‌ பலரும் தற்சார்ப்பு திட்டமிடலை மேற்கொள்வார்களா என்பதை பின்வரும் நாள்களில் பார்க்கலாம்.

இதையும் படிங்க...’இஞ்சி, பூண்டுதான் பூச்சிக்கொல்லி... மாட்டுச் சாணம், கோமியம்தான் உரம்’ - இயற்கை விவசாயம் செய்து பிரமிக்க வைக்கும் தம்பதி!

Last Updated : Aug 2, 2020, 2:36 PM IST

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.