ETV Bharat / state

திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை!

author img

By

Published : Nov 2, 2019, 3:21 PM IST

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான 'சூரசம்ஹாரம்' இன்று மாலை நடைபெறுகிறது.

tiruchendur temple

முருகனின் அறுபடை வீடுகளின் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் முருகன் கோயிலில் அக்டோபர் 28ஆம் தேதி கந்த சஷ்டி திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது.

இதனையொட்டி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் திருச்செந்தூருக்குச் சென்று விரதமிருந்து வழிபடுகின்றனர். இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை கோயில் கடற்கரையில் நடைபெறுகிறது.

திருச்செந்தூர் சூரசம்ஹாரம் திருவிழா

இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது. கோயில் கடற்கரையோரத்தில் நடைபெறும் சூரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்குள் வரத் தொடங்கியுள்ளனர்.

பக்தர்களின் பாதுகாப்புக் கருதி சென்னை, மதுரை, விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து சுமார் மூவாயிரத்து 500 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்கரையின் பத்து இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமலிருக்க காவல் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கடலில் புனித நீராடும் பக்தர்களின் பாதுகாப்புக் கருதி தடுப்பு வலைகள் அமைக்கப்பட்டு பைபர் படகுகள் மூலம் கண்காணிக்கப்பட்டுவருகிறது. கோயில் வளாகம் மட்டுமல்லாது நகரின் முக்கியப் பகுதிகள் அனைத்திலும் எழுபது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டுவருகிறது.

சூரசம்ஹாரத்தை முன்னிட்டு திருநெல்வேலி, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 250 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன.

Intro:
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடை பெறுகிறது. இதனையொட்டி பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
Body:
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடை பெறுகிறது. இதனையொட்டி பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

தூத்துக்குடி

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோவிலில் நடை பெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான கந்த சஷ்டி திருவிழா. இந்த திருவிழா கடந்த மாதம் 28 ஆம் தேதி யாகசாலை பூஜையடன் துவங்கி சிறப்பாக நடைபெற்றுவருகிறது.

மேலும் இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் இன்று மாலை கோவில் கடற் கரையில் நடைபெறுகிறது.
இதற்காக இன்று அதிகாலை 1.00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும் 2.00 மணிக்கு உதயமர்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. இதை தொடர்ந்து சுவாமி ஜெயந்தி நாதர் வள்ளி தெய்வானை அம்பாளுடன் யாக சாலை மண்டபத்தில் எழுந்தருளினார். அதன்பின் நடைபெற்ற யாகசாலை பூஜை க்கு பின் அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து பிற்பகல் 1.00 மணி அளவில் சுவாமி வள்ளி தெய்வானை அம்பாளுடன் சண்முகவிலாசம் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளிகிறார்.

அதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 2.00 மணி அளவில் திருவாடுதுறை சஷ்டி மண்டபத்திற்கு எழுந்தருளி அங்கு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடைபெறும்.

அதனையடுத்து மாலை 4.30 மணிக்கு மேல் சூரனை வதம் செய்வதற்கு கடற்கரைக்கு எழுந்தருளுகிறார்.
முதலில் யானை முகம் கொண்ட தாரகாசூரனையும் இரண்டாவதாக சிங்கமுகம் கொண்ட சிங்கபத்மனையும் மூன்றாவதாக தன்முகம் கொண்ட சூரபத்மனையும் தனது வேலால் வதம் செய்து நான்காவதாக மாமரமாகவும், சேவலாகவும் வந்த சூரபத்மனை வதம் செய்து செவலை தனது கொடியாகவும் மாமரத்தை மயிலாகவும் மாற்றி தன் வாகனமாக மாற்றி ஆட்க்கொள்ளுகிறார்.

மேலும் இந்த நிகழ்வை காண்பதற்கு லட்ச்சக்கணக்கான பக்தர்கள் தற்போது கோவிலுக்கு வரத்துவங்கி உள்ளனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி சென்னை, மதுரை, விருதுநகர், சிவகங்கை திருநெல்வேலி, கன்னியாகுமரி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 3,500 காவல் துறையினர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடற்கரையில் 10 இடங்களில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க காவல் துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடலில் புனித நீராடும் பக்தர்கள் பாதுகாப்பு கருதி தடுப்பு வலைகள் அமைக்கப்பட்டு பைபர் படகுகள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் கோவில் வளாகம் மட்டுமல்லாது நகரின் முக்கிய பகுதிகள் அனைத்திலும் 70 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு அனைத்து பகுதிகளும் கண்காணிக்கப்பட்டுவருகிறது. மேலும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளான குடி தண்ணீர். கழிப்பறைகள் அனைத்தும் செய்யப்பட்டுள்ளது. திருநெல்வேலி, மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.